Just another WordPress.com site

மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் கோவில் ஆடைக் கட்டுப்பாட்டுத் தடை உத்தரவை வரவேற்கிறோம், பாராட்டுகிறோம்.கவிஞர் தணிகையின் 1155 ஆம் பதிவு

மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் கோவில் ஆடைக் கட்டுப்பாட்டுத் தடை உத்தரவை வரவேற்கிறோம், பாராட்டுகிறோம்.கவிஞர் தணிகையின் 1155 ஆம் பதிவு

வேர்ட்பிரஸ் டாட் காம் செய்தது சரியா? செய்வது சரியா?

 

வேர்ட்பிரஸ் டாட் காமில் எமது மறுபடியும் பூக்கும் வலைப்பூவை நேற்று இந்த செய்தியுடன்(கோவில் ஆடைக் கட்டுப்பாட்டு சட்டம் பற்றிய செய்தியுடன்) சில கஜுரோஹா படங்களை வெளியிட்டு பிரசுரிக்கும் முன் வேர்ட்பிரஸ் எமது வலைப்பூவையே தடைப் படுத்தி இருக்கும் நிலையில் இந்த தீர்ப்பு நமக்கு மகிழ்வளிக்கிறது. இதில் வீணாய்ப் போனது எமது வலைப்பூ மட்டுமே.

சுமார் 5 ஆண்டுகளுக்கும் மேலாக 1150 பதிவுகளுடன் மிகவும் முக்கியமாக நூற்றுக்கணக்கான நாடுகளில் இலட்சக்கணக்கான வருகையளர்களுடன் இருந்த வலைப்பூவை மறுபடியும் பூக்கும் என்ற எனது வலைதளத்தை சொல்லாமல் கொள்ளாமல் எந்த வித முன்னறிவிப்புமின்றி எழுதி ஆட்சேபகரமாக இருந்தது எனச் சொல்லப்படும் கஜுரோஹா படத்துடன் எழுதப்பட்டிருந்த பதிவை வெளியிடுமுன்னே வலைதளத்தை முடக்கி விட்டார்கள்.

எமது பதிவுகளை எடுத்து புத்தகமாக்கலாம் என்ற எனது கனவு அடியோடு தகர்ந்தது. என்னதான் முயற்சி செய்து தொடர்பு கொண்டு வேர்ட் பிரஸ்ஸுக்கு எழுதினாலும் தக்க பதில் இல்லை.எனவே இனி எமது டான்பேஜஸ் டாட் வேர்ட் பிரஸ் டாட் காமை தமிழ் பதிவிற்கும் ஆங்கில பதிவிற்கும் ஒரே தளமாக வெளியீட்டிற்கு பயன்படுத்துகிறேன். அதையும் தடைப்படுத்தினால் தணிகை ஹைக்கு டாட். பிளாக்ஸ்பாட் டாட் காம் வழியே எழுதுவேன். ஒரு கதவு மூடினால் இன்னொரு கதவு திறக்கும் எனப் பெரியவர்கள் சொல்வதற்கேற்ப.

சாப்பிடாமல், சில நேரம் தூங்காமல், குடும்பத்தாரின் சலிப்புகளையும் புறம் தள்ளி சரியில்லாத வீட்டில் ஒரு சிறிய ஊரில் இருந்து கொண்டு அத்தனை பதிவுகளையும் அரங்கேற்றினேன் அதன் வலி தெரியாமல் அந்த வேர்ட்பிரஸ் அமெரிக்க நிறுவனம் எழுத்தோடு அந்த கட்டுரையோடு அந்த படங்கள் தொடர்புடையதாய் இருந்தபோதும் அறிவிப்பு ஏதுமின்றி எச்சரிக்கை செய்யாமல் எனது காவிரிக் கரையோரத்துக் கனவுகளை மிருகத்தின் காலடியில் போட்டு சிதைத்து விட்டார்கள். மறுபடியும் பூக்கும் என்றபடி பூத்துக் கொண்டே இருந்த எமது பதிவுகளுக்கு இனி சிக்கல் ஏற்படுத்தி விட்டார்கள். ஆனால் இதனால் எல்லாமா எமது எழுத்தூற்று நிற்கப் போகிறது?

 

ஜல்லிக்கட்டு சர்ச்சையும் கோவில் ஆடைக் கட்டுப்பாட்டு சட்டமும் என 2 கருத்துகள் பற்றி எமது கருத்தை பதிவிட்டிருந்தேன். இரண்டுமே நெருடலானவை. பிசிறின்றி தெளிவாக முடிவு எடுக்க முடியாதவை.

பெரும்பாலும் மக்கள் ஆதரவளிக்கிறார்களே என ஜல்லிக்கட்டை அனுமதிப்பதிலும் பிரச்சனை இருக்கிறது. உச்சநீதிமன்றத்திற்கு பிராணி வதை தடுப்பு சங்கம் மறுபடியும் மேல் முறையீடு செய்திருப்பதாகவும், தமிழக அரசு கேவிட் மனு செய்திருப்பதாகவும் செய்திகள்.

ஆனால் கோவில் ஆடைக்கட்டுப் பாட்டுச் சட்டத்தை தடை செய்து மதுரை உயர்நீதிமன்றக் கிளை இன்று தடை விதித்து விட்டதாகவும் முதன் முதலாக ட்விட்டர் தளத்தில் வந்திருந்த ஊடகச் செய்திகள் வாயிலாக அறிந்தேன். நல்ல தீர்ப்பு. இதன் சார்பாகத்தானே நேற்று எழுதினேன். கோவில், பார்ப்பனக் கூடாரம் பற்றி எழுதியிருந்தேன். அவற்றை இதற்கு முன் உள்ள பதிவில் காணலாம்.

 

எனவே வழக்கம் போல உங்களின் ஆதரவை இரு கரம் கூப்பி இந்த தளத்திற்கும் வரவேற்கிறேன்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s