Just another WordPress.com site

சாமியே சரணம் அய்யப்பா உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு ஒரு வணக்கமப்பா: கவிஞர் தணிகையின் 1157 ஆம் பதிவு

சாமியே சரணம் அய்யப்பா உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு ஒரு வணக்கமப்பா: கவிஞர் தணிகையின் 1157 ஆம் பதிவு


பெண்களை கேரளத்தின் அய்யப்பன் கோவிலில் அனுமதிக்காதிருப்பது சட்டத்திற்கு புறம்பானது, இந்திய அரசியல் சாசனத்திற்கு முரணானது என உச்ச நீதிமன்றம் கேரள அரசுக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது ஒரு வரலாற்றுப் பதிவு.

அப்படி ஆனால் இதுவரை அதை செய்து வந்த கேரள அரசுகளும், திருவிதாங்கூர் தேவசம் போர்டும் சட்ட விதிகளை மீறி குற்றம் செய்தவையாக குற்றவாளிகள்தானே. நாட்டின் உச்ச நீதிமன்றம் சொல்வதையே ஏற்றுக் கொள்ளாத அரசுகளும் அமைப்புகளும் இருக்கக் கூடாதுதானே? கலைக்கப் பட வேண்டியதுதானே?

தொடர்புடைய கேரள அமைச்சர் இப்போதும் கூட தேவசம் போர்டுக்கு எதிராக எதுவும் செய்ய மாட்டோம். அவர்கள் விருப்பப் படியே செயல்படுவோம். அப்படி ஒரு தீர்ப்பு வந்திருந்தாலும் மேல் முறையீடு செய்வோமென கூறியிருக்கிறார்.உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல்.

மேலும் அய்யப்பன் ஒரு பிரமசாரி, அவருடைய கோவிலுக்கு பெண்கள் வந்தால் தீட்டு பட்டுவிடும் அதனால் பெரும் துன்பங்கள் வந்துவிடும் என இதன் பொறுப்பில் இருந்த ஒரு வாயில் பெயர் நுழையாத ஒரு மாந்திரிக தந்திரி மிரட்டுகிறார். கேரளத்து மண்ணுக்கு பெரும்பாலும் தமிழர்களின் பணத்தை பொதுவாக நாட்டின் பல மாநிலங்களின் பணத்தை ஒரு சீசனில் வாரிக் கொட்டிக் கொண்டிருப்பது போய்விடுமே என்ற மாநிலப் பற்று அய்யப்பன் பற்றாகிவிட்டது.

 

 

10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் போனாலும் தடைசெய்யப்படுகிறார்கள். மேலே செல்ல முடியாது. அதை மீறிய ஜெயமாலா என்னும் நடிகை சென்று விக்கிரகத்தை தொட்டுவிட்டே வந்து விட்டார். கழுவி விட்டார்கள் .பெண் தொட்டு விட்டு சென்று விட்டாரே என அவர் மேல் கொந்தளித்தார்கள். வழக்கெல்லாம் போட்டது மாநில அரசும், தேவசம் போர்டும். ஆனாலும் அய்யப்பனும் ஏதும் ஆட்சேபனை தெரிவித்ததாகத் தெரியவில்லை

திருவனந்த புரம் பத்மனாப சாமி கோவில் பொக்கிசகம் கணக்கெடுப்பு செய்த போதும் இப்படித்தான் பெரும் பீதி கிளப்பினார்கள். ஆனால் கடவுள் பத்மனாபன் ஒன்றுமே செய்யாமல் அமைதியாகவே நாட்டுக்கு ஒத்துழைத்தார். ஏனோ அந்த செல்வ வளம் யாவும் என்னதான் ஆகிறது என்று தெரியவில்லை. அப்படியே காத்து வைப்பதற்கு எதற்கு இத்தனை அலட்டல் என்றும் தெரியவில்லை.

 

சில அறிவார்ந்த பெண்கள் பெண்களிடமிருந்துதானே ஆண்கள் வந்தீர்கள். அவர்களின் கருப்பையில், சூல் கொண்டு, அந்த சூதம், அந்த திரவத்தில் தானே கிடந்து கர்ப்பம் தரித்து குழந்தையாய் வெளி வந்தீர்கள் எனக் கேள்வி கேட்டார்கள் அப்போதும் வெட்கமில்லை ஒன்றும் மாறுவதாக காணோம்.

பம்பா நதி தீரத்தில் மனித மலமாகவே மிதந்து செல்லுமாம் அய்யப்ப சாமி மார்கள் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஒரு புறம் குளித்துக் கொண்டிருப்பார்களாம். எல்லாம் (ஆ)சாமிகள் சொல்லக் கேட்டதுதான். நமக்கென்று எந்த சொந்த அனுபவமும் கிடையாது. நாம் ஒரு முறை கூட சென்றதில்லை. ஒரு இயற்கைப் பிரதேசம் மனித ஊடுருவல்களால் மாசுபட்டு வருவது என்பது மற்றும் மறுக்க முடியாத உண்மை.

41 நாள் விரதமிருக்க வேண்டுமாம், எவருமே இப்போது அப்படி இருந்துதான் அய்யப்பன் கோவிலுக்கு போவதாகத் தெரியவில்லை. அதெல்லாம் கடந்த காலம். உடனுக்குடன் அல்லது ஓரிருநாள் மட்டுமே மாலையணிந்து செல்வார்தான் இப்போது அதிகம். அப்படி 41 நாள் பெண்கள் விரதமிருக்க முடியாமல் மாதவிடாய் நாட்கள் குறுக்கிட்டு விடுமாம் அதனால்தான் 10 வயது முதல் 50 வயது வரை பெண்கள் அனுமதிக்கப் படுவதில்லை என்கிறார்கள்.

பாராளுமன்றத்தில், சட்டமன்றத்தில் எல்லாம் 33% அல்லது சம அளவில் பெண்கள் வரவே வழியில்லை இன்னும் இந்த நாட்டில் எனும்போது அய்யப்பன் பிரமசாரி இவர்களை எல்லாம் எப்படி அருகே விடுவார்? என்ன ஆவது? உலகே மாய்ந்து விடாதா?

பந்தள மகாராஜாவுக்கு பிறந்த பிள்ளை மாற்றான் தாய்க்கு அவளின் கொடுமைக்கு ஆளாகி கானகம் சென்று புலிப்பால் கொண்டு வரச் சென்ற பிள்ளை என ஒரு பக்க கதையும் அது ஹரியும் ஹரனும் இணைந்ததால் வந்த பிள்ளை என ஒரு கதையும் அதாவது ஹரி பெண்ணுருவம் கொண்டு அவள் அழகில் மயங்கிய ஹரன்(மகேஸவரன்) அதாவது தன் இனப் புணர்ச்சி அல்லது ஆண் பெண்ணாகிய போது புணர்ந்து வந்த குழந்தை இந்த அய்யப்பன் என்றும் நிறைய கதைகள்…இவர் விநாயகன், முருகன், ஆகியோருக்கு தம்பியாம்.

அண்ணன் முருகனுக்கு வள்ளி, தெய்வானை என்ற இருமனைவிகள் இருந்தும், பிள்ளை ஏதும் இன்னும் பிறவாததை எண்ணி தம்பி மணமுடிக்காமல் இருந்து விட்டார் போலும்.ஒரு புறம் அய்யப்பன் வாழ்ந்தவர் அவருக்கும் இரண்டு மனைவிகள் இருந்தனர் என கோவை சார்ந்த ஒரு எழுத்தாளர் எழுதிய ஆய்விலக்கியம் இருப்பதாகவும் ஒருமுறை ஒரு தினசரியில் கட்டுரை வெளி வந்ததை படித்ததாக நினைவு.

ஒரு பக்கம் ஆண்ட பரம்பரை, ஒரு பக்கம் கடவுள் ஒரு பக்கம் பிரமசாரி, ஆனால் மகரதீபம், ஜோதி போன்றவை பழங்குடிகளால் ஏற்றப்படுவது என்பது மட்டும் நிரூபணமாகிவிட்டது.

எப்படியோ நீதிமன்றத்தின் வழி நல்ல சேதிகள் வர ஆரம்பித்து விட்டன. உச்ச நீதிமன்றம் பெண்ணுக்கு கோவிலில் சம உரிமை இருக்க வேண்டும் என்று சொல்லிய அதே நேரத்தில் மதுரை உயர் நீதிமன்றக் கிளை(சென்னை உயர் நீதிமன்றக் கிளையான மதுரை உயர் நீதிமன்றத்திலும் கோவில் ஆடைக்கட்டுப்பாட்டுக்கு தடை விதிக்கபப்ட்டதும் நல்ல சமுதாய நலன் சார்ந்த மக்களுக்கான சேவையாக மக்களுக்கான தீர்ப்பாகவே இருக்கிறது. அதற்கு நாம் மகிழ் வேண்டும். அதற்கு தலை வணங்க வேண்டும்
ஆனால் ஜல்லிக் கட்டு விவகாரத்தில் பானுமதி என்னும் நீதிபதி ஜகா வாங்கி விட்டார் நமக்கெதுக்கு வம்பு என்று செய்திகள் வந்து விட்டன. வேறொரு நீதிபதி இதற்கு தீர்ப்பு எழுத இருக்கிறார். மேலும் இது போன்ற நிகழ்வுகள் தற்போதைய தமிழக முதல்வரின் வருவாய்க்கு அதிகமான சொத்து சேர்ப்பு வழக்கிலும் நல்ல சேதியாக நேர்மையான நீதியாக வருமோ என்ற அடையாளத்தையும் அறிகுறியையும் எதிர்பார்க்கலாமா? ஆனால் அந்த வழக்குக்கு உண்டான இரு நீதிபதிகள் மாறியிருப்பதாகவும் மாநிலத்தில் ஆளும் கட்சியும் மத்தியில் ஆளும் கட்சியும் இன்னும் நம்பிக்கையுடன் எதிர்வரும் தேர்தல் கூட்டணிக்கும் அந்த நீதிமன்றத் தீர்ப்புகளுக்கும் தொடர்பேற்படுத்தி எல்லாம் செய்வதில்லை. எந்த முடிச்சும் போட்டு முழங்காலையும் மொட்டைத்தலையையும் நாம் இணைத்துப் பார்க்கக் கூடாது. நம்புவோமாக

 

பி.கு: பூக்கள், மாலைகள், தேங்காய்கள், தானியங்கள், காய்கறிகள் எல்லாமே கார்த்திகை மாத வாக்கில் தமிழகத்தில் விலை ஏறுவது வருடா வருடம் தவிர்க்க முடியாதவையாகி விடுகின்றன அய்யப்பா. சாதாரண மனிதரால் என்ன செய்ய முடியும் கொஞ்சம் கருணை காட்டி விலை இறக்கப்பா.மேலும் அந்த தேங்காய்களை எரித்து நாசம் செய்கிறார்களே டன் கணக்கில் இதெல்லாம் அடுக்குமாப்பா? பாதிக்கப்பட்ட ஒரு ஏழையாய் இந்த பதிவு.திருப்பதி, சபரிமலைக்கே எமது தமிழ் நாட்டின் சில்லறையெல்லாம் போக பேருந்தில் நடத்துனர் எங்களை சில்லறை இல்லாவிட்டால் இறங்கு என கடிக்கிறது எல்லாம் தெரியுதாப்பா?

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s