Just another WordPress.com site

போகியில் போலி ஒழிய…சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா:கவிஞர் தணிகையின் 1159-ஆம் பதிவு

போகியில் போலி ஒழிய…சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா:கவிஞர் தணிகையின் 1159-ஆம் பதிவு

போலிப் பெயர்: அருள் சுந்தரம். உண்மையாக படிப்பு: 1 ஆம் வகுப்பு, பணி: ஆசிரியப்பணி: இடம்:கங்கோஜி கொத்தூர் ஊராட்சிய ஒன்றிய துவக்கப்பள்ளி கிருஷ்ணகிரி தர்மபுரி அருகே 2001ல் பணி சேர்ந்தது.. 8 ஆண்டு ஆசிரியராகவும், தலைமை ஆசிரியராக 7 ஆண்டு, அது எப்படி ? அது மட்டுமல்ல ஆதி திராவிடர் சான்றிதழ் பெற்றுள்ளார்.. தலைமறைவு. உண்மையான பெயர் ராஜா த/பெ: பச்சப்பன். படித்தது கதிரிபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 01.07.78ல் சேர்ந்து 1 அம் வகுப்பு மட்டுமே படித்துள்ளார். அதன் பிறகு படிக்கவேயில்லை. செய்தி. இதனால் யாவரும் அறிந்து கொள்ள வேண்டியது யாது எனில் தமிழகத்தில் அரசின் எல்லாத் துறைகளுமே நடைபெறும் எல்லாக் குற்றங்களுக்கும் உடந்தைதான்.வருவாய்த்துறை, ஆதிவாசிகள் மற்றும் பழங்குடிகள் என சான்றிதழ் அளிக்கும் பிற்பட்டோர்துறை மற்றும் வருவாய்த்துறை எல்லாமே இதன் பங்காளிகள். நாம் நமது கதைக்கு வருவோம். இந்த ராஜா என்னும் அருள் சுந்தரம் மற்றும் பலரின் கதையும் இப்படித்தான்.

 

 

ராஜா என்னும் அருள் சுந்தரம் இவரைக் காணவில்லை. இவரின் செல்பேசி அணைத்து வைக்கப்பட்டு உள்ளது. காவல்துறை இவரையும் யுவராஜ் போல தேடிக்கொண்டு இருக்கிறது. ஆனால் இதில் எந்த துணைக் காவல் கண்காணிப்பாளரும் தற்கொலை செய்ய மாட்டார் என எதிர்பார்க்கலாம். இது போல நிறைய போலி ஆசிரியர்கள் இருப்பதால் இப்போது கல்வித் துறைக்குத் தலைவலி அனைத்து ஆசிரியர்களிடமும் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்து வருகிறது

கடந்த வாரத்தில் தாசில்தார் ஒருவர் ரூபாய் 100 இலஞ்சமாக பெற்ற குற்றம் நிரூபிக்கப்பட்டதால் 3 ஆண்டு சிறைத் தண்டனை பெற்றுள்ளார். இவரின் பதவி என்ன, குடும்பம் என்ன நிலை என்ன சம்பளம் என்ன இதர படிகள் என்ன? மற்றதை உங்கள் ஊகத்திற்கே விட்டு விடுகிறேன்.இவன்களுக்கு எல்லாம்தான் “செல்வி அம்மா 67 வயது மூதாட்டி” முதல்வர் அவர்கள் பொலீரோ கார் வழங்கினார்கள் பணி செய்ய அவசரத்துக்கு என்பதெல்லாம் மறந்து விட்ட செய்திகள்.

போலி ஆசிரியர் பற்றி ஒரு ஆசிரியர் சொன்ன கருத்து: எல்லாத் துறைகளிலும் இருப்பது போலவே இதிலும்.இதைப்பற்றி என்ன சொல்ல முடியும் என்கிறார்( எமது ஊக்குவிப்பால் எமது குடும்பத்திலேயே சுமார் 10க்கும் மேற்பட்ட ஆசிரியப் பெருமக்களை உருவாக்கி இருக்கிறோம் இவர்கள் உதவிக் கல்வி அலுவலர் நிலை முதல் தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் என பிரிவுகளில் பணி செய்து வருபவர்கள்) ஆசிரியப் பணி என்பது எல்லாப் பணிகளுக்கும் அடிப்படை. சமுதாயத்தை உருவாக்குவது.இதிலேயே இப்படி ஊழல் என்னும்போது இந்த தமிழ் சமுதாயம், இந்தியா, தழிழ்நாடு எப்படி இருக்கும் என சொல்வதற்கில்லை

ஆசிரியர்க்கு மாதமானால் சம்பளம் போடுவதற்கே அரசுப்பணியாளர் கையூட்டு புரியலை இல்லை இலஞ்சம் வாங்கிக் கொண்டுதான் பில்லை, பட்டியலை அடுத்த கட்டத்திற்கு அனுப்புகின்றனர். எனவே தலைமை ஆசிரியர் ஒவ்வொரு மாதமும் ஆசிரியர்களிடம் 100 ரூ,200 ரூ வாங்கிக் கொண்டுதான் பட்டியலை (பில்லை) நிரப்பப் பட்ட படிவத்தை தயார் செய்கிறார்.இது அலுவலர்களுக்கு கொடுப்பதில் பங்கீடு என்கிறார். சம்பளம் ஆசிரியர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு விடுகிறது. அரசுப் பள்ளிகள் நசுங்கி வருவதும் தனியார் பள்ளிகள் தழைத்து வருவதும், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கார், பங்களா, கை நிறைய மாதமானால் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரத்துக்கும் மேல் கூட சம்பளம் பெறுவதும் தனியார் பள்ளியில் ஆசிரியர்கள் ரூ.1500க்கும் கூட மாதமொன்றுக்கு பணி புரிவதும் கவனத்தில் கொள்ள வேண்டியது.

மேலும் ஒவ்வொரு ஊரிலும் காலி இடம் இருந்தாலும் வேண்டுமென்றே இந்த ஊரில் சுலபமாக நன்றாக வசதியாக ஆசிரியர் பணி செய்ய வேண்டிய ஆசிரியரை கன்னியாகுமரிக்குப் போடுவது, கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்குப் போடுவது மாறுதல் அவசியம் வேண்டும் எனவே அங்கிருந்து பேரம் பெரும்தொகை கைமாற கையூட்டு இலஞ்சம் பெறுவது

வருடா வருடம் ஆண்டு தணிக்கை செய்யப்பட பள்ளிக்கு ஒரு அலுவலராக ஒரு மேல்நிலையில் உள்ள கல்வி அலுவலர் வருவார் அவருக்கு வேண்டிய அளவு படி அளக்கப்படுகிறது பள்ளியின் சார்பாக எல்லா ஆசிரியர்களிடமிருந்தும் தலைமை ஆசிரியரிடமிருந்தும் அல்லது பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட வேறு பிரிவினங்களின் பண முடிப்புகளிலிருந்தும்.. இதல்லாமல் மடிக்கணினிகள், கல்வி பொருட்கள் மொத்தமாக வாங்குவது என மக்களின் வரிப்பணம், அரசின் நிதி கொள்ளை போகிறது தனிக் கதை.

கல்வி நிலை தரம் என்னவெனில் 10ம் வகுப்பு படிக்கும் அரசுப்பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவர்(களுக்கு) சிலருக்கு தமிழ் உயிர் எழுத்தான அ, ஆ, இ,ஈ..முதல் முதல் எழுத்தான 12 எழுத்துகள் கூட தெரியவில்லை என்பது அபாயகரமான வேதனை அளிக்கும் தாய் மொழிக்கல்வி(இந்நிலையில் தான் நாம் தமிழரின் பாரம்பரியமான வீர விளையாட்டை ஜல்லிக்கட்டை எப்படியும் உச்ச நீதிமன்றம் தடையிட்டாலும் மீறி வேறு பெயரிலாவது நடத்தத் தீர்மானிக்கிறோம் இந்த ஆசிரியர்கள் போலி பெயர்களுடன் சான்றிதழ் பெற்றது போல )

கல்வித் துறை நிலை இப்படி இருக்க மருத்துவத் துறையிலும் உயிர் காக்கும் துறையில் போலி மருத்துவர்கள், பள்ளி இறுதி படிப்பு கூட தாண்டாதவர்கள் எல்லாம் மருத்துவராக பணி செய்து அவரிடம் எண்ணிலடங்கா மக்களும் வைத்தியம் செய்து கொண்டுதான் இருந்திருக்கிறார்கள் என்று அவ்வப்போது அவர்கள் பிடிபடும்போது நம்மால் காணமுடிகிறது.இவர்கள் அறுவை சிகிச்சை செய்வதும், கூட உண்டு.

அடுத்து மக்களின், நாட்டின் மிக முக்கியத் துறையான கல்வி, மருத்துவம் அடுத்து பாதுகப்புத்துறை. இராணுவம், விண்வெளி, கடற்கப்பற் படை, எல்லாவற்றிலுமே போலி சான்றிதழ் பெற்று பணியில் இருக்கிறார்கள் என்பது யாவரும் அறிந்ததே .அது மட்டுமல்ல சமீபத்தில் நடந்த பதான்கோட் விமானப்படைத் தளம் பாகிஸ்தான் எல்லைக்கோட்டு அருகே தீவிரவாதிகள் இரண்டு நாள் தங்களது கைவரிசையை காட்டி இருக்கிறார்கள். அங்கிருந்து ஒரு செய்தி: ரூபாய் 50 கொடுத்தால் போதும் காவலர்கள் அந்த வளாகத்துள் ஆடு மாடு மேய்க்க அனைவரையும் விட்டு இருக்கிறார்கள் என்பது . இப்படி காலம் காலமாக அனுமதிக்கப் பட்டு இருக்கிறார்கள் என்பது. அப்போது எவ்வளவு ஊடுருவல் இருக்கும் இருந்திருக்கும் என வழக்கம் போல நீங்களே யூகித்திக் கொள்ளலாம்.

 

ஆக இதெல்லாம் நாட்டின் மிக முக்கியமான தலையாயத் துறைகள். வருவாய்த் துறை வட்டாட்சியர் 100 ரூபாய் இலஞ்சம் பற்றி எல்லாம் முன்பே குறிப்பிட்டதுதான், மேலும் போக்குவரத்துத் துறை அலுவலகங்கள், நெடுஞ்சாலை, மக்கள் அதிகம் புழங்கும் பொதுப்பணித்துறை, ரயில்வே பற்றி எல்லாம் இன்னும் சொல்லவே வார்த்தைஇல்லை.காவல் துறையின் ஆய்வாளர் ஒருவரும் வழக்கறிஞர் ஒருவரும் ஒரு குற்றவாளியை தப்புவிக்க 5 இலட்சம் கேட்டுப் பேசியதை அனைவரும் வாட்ஸ் அப் செய்தியாய் பார்த்தோம்.

என்ன ஒரு விதி என்றால் பாரட்டப் பட வேண்டிய அம்சம் இந்தியாவில் என்றால்,இவ்வளவு ஊழலுக்கும் பிறகும் இந்தியா உலக அளவில் படைபலத்தில் 4 ஆம் இடம், கால்நடைச் செல்வத்தில் முதலாம் இடம், இஸ்ரோ உலக அரங்கில் விண்ணியலில் சாதனை படைக்கும் முன்னணி நாடுகளுள் முதல் 5 ஆம் இடத்துக்குள், இப்படி பல சாதனைகளும் அரங்கேறி வருவதுதான்.

 

 

 

 

 

 

எல்லாம் ஒழுங்காக இருந்தால் இன்னும் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பார்க்கிறோம்.

இந்த போகியில் இது போன்ற போலிகள் எல்லாம் போக, எரியூட்டப்பட, தூக்கி எறியப்பட வெளியில் வீசப்பட (நல்ல வேளை அப்படிப் பட்ட ஆசிரியப்பணியில் அரசு ஆசிரியராக ஊதியம் பெற்றுக் கொண்டு நாம் எல்லாம் இல்லை. இது எல்லாம் ஆசிரியக் குலத்துக்கே அவமானம். வெட்கம்)இல்லை இல்லை எங்களுக்கென்ன இதில் வெட்கம் என எமது உற்றார், உறவினர், சுற்றம் ஆகிய ஆசிரியப்பெருமக்கள் சொல்வது கேட்கிறது இவர்கள் போன்ற தலைமை ஆசிரியர் மதுக்கடையில் இருந்து கொண்டே நல்லாசிரியர் விருது பெற்றபோதும், தலமை ஆசிரியர் மதுக்குடிக்க படிக்கும் பையன்களிடம் நிலக்கடலை வறுத்து சைட் டிஸ் என எடுத்து வர பணித்த போதும் ஆம்.ஆம் ஆசிரியப்பணி மிக மேன்மையானதுதான்…

ருத்ரன் சொல்வது போல காலை எழுந்ததும் அரிப்பு அடங்க நாம் எழுதுவதால் ஏதாவது மாறப்போகிறதோ?

சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா:அடிமை கொண்ட நடையினாய் போ போ போ.

இதுதான் இந்த போகிப் பண்டிகையின் பொங்கல் வாழ்த்தாக யாம் தரும் பதிவு.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

செய்தி ஆதாரம்: தினகரன், எம்.எஸ்.என் ஊடகம் மற்றும் தினசரி செய்திகள்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s