Just another WordPress.com site

ஜல்லிக்கட்டு தடைக்கு பின்னால் இயங்கும் பீட்டாவின் அபாய முகம் கடிதமும் எனது ஒரு பதிலும்… கவிஞர் தணிகையின் 1160 – ஆம் பதிவு

அன்பு பிரவின் எழுதுகிறேன் ஒரு கடிதம்: கவிஞர் தணிகையின் 1160 – ஆம் பதிவு
மறுபடியும் பூக்கும்…

 

thangavelu Praveen to me

Anna,

          ஜல்லிக்கட்டு தடைக்கு பின்னால் இயங்கும் பீட்டாவின் அபாய முகம்
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் இடைக் காலத்தடை விதித்திருக்கும் இந்த வேளையில், ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த PETA என்ற அமைப்பு பற்றி நாம் தெரிந்து  கொள்வது அவசியம்.
 யார் இந்த PETA?
PETA- People for the ethical treatment of animals என்று தன்னை அழைத்துக் கொள்ளும் இந்த அமைப்பானது 1980 ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் இயங்கி வருகிறது. அமெரிக்காவில் ஆதரவற்ற விலங்குகளைப் பாதுகாக்கும் ஒரு காப்பகம் என  தன்னைப் பதிவு செய்து கொண்டது.
(எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் நம்மூரில் முதியோர் காப்பகங்கள் இயங்கி வருவதைப் போல) சரி… அதன் பின்னர் நடந்தது என்ன? வீதியில் ஆதரவின்றி அலையும் நாய்கள் மற்றும் பூனைகளைக் காப்பாற்ற களத்தில் குதிக்கப் போவதாக அறிவித்தது பீட்டா.
ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான போன்கால்கள் பீட்டாவிற்கு தெருநாய்களைப்பற்றி வரத் துவங்கின. இலட்சக்கணக்கான விலங்குகள் காப்பகத்தில் குவிந்துவிடவே அமெரிக்க அரசை நிர்பந்தப்படுத்தி ஒரு சட்டம் இயற்ற வைத்தது பீட்டா.
அந்தச் சட்டத்தின் படி பதினைந்து நாட்கள் பீட்டா ஒரு ஆதரவற்ற நாயைப் பராமரிக்கும். அந்தப் பதினைந்து நாட்களுக்குள் யாரும் அந்த நாயைத் தத்தெடுக்க முன்வராவிட்டால் பீட்டா அந்த நாயைக் கருணைக் கொலை செய்து கொள்ளலாம்.
இவ்வாறு 2015 ம் ஆண்டு மட்டும் பீட்டா கொலை செய்த நாய்கள், பூனைகள், முயல்கள் மற்றும் இன்னபிற விலங்குகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? அதிர்ச்சி அடைய வேண்டாம்…35000.  ஆமாம் நண்பர்களே… முப்பத்தி ஐந்து ஆயிரம் !!! இந்தக் கருணை நிறைந்த மகா கொலைகாரர்கள்  நம்மிடம் வந்து சொல்கிறார்கள்…
நீ மாட்டு வாலைத் திருகுகிறாய்!
கொம்பைப் பிடிக்கிறாய்!
கழுத்தைக் கட்டிக் கொண்டு அதைத் துன்புறுத்துகிறாய்!
அதனால் நீ மாட்டை மிருக வதை செய்கிறாய்… எனவே ஜல்லிக்கட்டு விளையாட்டை தடை செய்ய வேண்டும்!
‘சாத்தான் வேதம் ஓதுகிறது’ என்பார்களே நம்மூரில்… பீட்டா செய்வது அதுவே தான்!!
பீட்டா – மிருகவதை வியாபாரம்
அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் பீட்டா கருணைக் கொலை என்ற பெயரில் ஏன் இத்தனை இலட்சம் நாய்களையும், பூனைகளையும்,முயல்களையும் கொல்ல வேண்டும்?
அதற்கு உணவு அளித்துப் பராமரிக்கப் பணமும், இடமும் இல்லை என்பது மட்டும் தான் உண்மையான காரணமா?  இதற்கான பதிலில் தான் இருக்கிறது சூட்சுமம்!
அமெரிக்காவில் வளர்ப்புப் பிராணிகள் விற்பனை என்பது பல்லாயிரக்கணக்கான கோடிகள் புரளும் மிகப் பெரிய மார்க்கெட்.
எனவே வளர்ப்புப் பிராணிகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் பீட்டாவிற்கு மிகப் பெரும் பணத்தை நிதியுதவி என்ற பெயரில் தொடர்ந்து வழங்கி வருகின்றன.
பீட்டாவின் இந்த கருணைக் கொலைகள் அவர்கள் வியாபாரம் சரிந்து விடாமல் உயர்ந்து கொண்டேயிருக்க உதவுகிறது என்பது தான் உண்மை. சரி. அப்படியானால் அமெரிக்காவில் பீட்டாவைத் தவிர வேறு ஆதரவற்ற விலங்குகளைக் காப்பாற்றும் அமைப்புகள் இல்லையா? என்று நீங்கள் கேட்கலாம்.
நிறைய இருக்கின்றன.ஆனால் பீட்டா அந்த நிறுவனங்கள் மீது தனது உளவாளிகளை ஏவி அவர்கள் அந்த விலங்குகளைப் பராமரிக்கும் விதத்தை புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கிறது. ( நம்மூர் ஜல்லிக்கட்டில் நடந்ததும் இதேதான்) அந்த ஆதாரங்களைக் கொண்டு நீதிமன்றத்தை அணுகி அவர்களை முடக்குகிறது.
போட்டியே இல்லாமல் நடக்கும் இந்த மிருகவதை வியாபாரம் பீட்டாவின் செல்வச் செழிப்பையும், செல்வாக்கையும் நாள்தோறும் அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றுகொண்டிருக்கிறது என்பதே இன்றைய நிலை!
 சரி… நம்மூர் ஜல்லிக்கட்டை நிறுத்துவதில் பீட்டாவிற்கு ஏன் இத்தனை அக்கறை?
 பீட்டா – தோலிருக்க சுளை முழுங்கும் ஆளு !
நம்ம தெருவில் சாதாரணமாக காணும் காட்சிதான் இது. இரண்டு அல்லது மூன்று மாடுகளை பக்கத்து வீட்டுக்காரர் சொந்தமாக வைத்திருப்பார்.
 பகலில் அந்த மாடு சர்வசாதாரணமாக வீதிகளில் அலைந்து கொண்டிருக்கும். கிராமங்களில் வயல்வரப்பின் ஓரமாக மேய்ந்து கொண்டிருக்கும்.
 நம் வீட்டுப் பெண்கள் அதற்கு வீட்டில் மீதமாகிப் போன கஞ்சியை பாத்திரத்தில் வைப்பார்கள். அதுபாட்டுக்கு குடித்துவிட்டு போய்க் கொண்டே இருக்கும்.
 காலையிலும், மாலையிலும் அந்த மாட்டின் சொந்தக்காரர் பத்து வீடுகளுக்கு பால் ஊற்றிவிட்டுப் போவார். அவருக்கான வருமானம் அதுதான்.
இது போக ஆவின் மாதிரியான கூட்டுறவு பால் பண்ணைகளுக்கு இந்த மாடு வைத்திருப்பவர்கள் பால் கறப்பார்கள்.
பீட்டாவின் கண்ணை ஊறுத்துவது இதுதான். இதிலென்ன இருக்கிறது உறுத்துவதற்கு? என்று உங்களுக்குத் தோன்றலாம்.
தமிழ்நாட்டில் மட்டும் இது போல் சிறு விவசாயிகள் மற்றும் மாடு வளர்ப்பவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் பால் உற்பத்தி சந்தையின் மதிப்பு ஒரு ஆண்டிற்கு எவ்வளவு தெரியுமா நண்பர்களே?
மூன்றரை இலட்சம் கோடிகள்!
சரி… இதற்கும் ஜல்லிக்கட்டுக்கும் என்ன தொடர்பு?
இருக்கிறது. கோவில் மாடு என்ற ஒரு விஷயம் நம்ம ஊரில் உண்டு. அந்த மாடு வருடம் முழுதும் ஊர் சுற்றிக் கொண்டு ஜாலியாக இருக்கும்.அந்த ஊரில் ஒரு முன்னூறு பசு மாடுகள் இருப்பதாக வைத்துக் கொண்டால் அத்தனை மாடுகளுக்கும் இனவிருத்தி செய்வது அந்த மாடுதான்.
இதுபோக ஜல்லிக்கட்டு விடுவதற்காக வளர்க்கப்படும் மாடுகளும் அந்த இனவிருத்தி வேலையைச் செய்யும். இந்த நாட்டு மாடுகள் அதிக பராமரிப்பு தேவைப்படாதவை. சிறிய அளவிலான மேய்ச்சல் அதற்கான உணவுத் தேவையை தீர்த்துவிடும். ஜல்லிக்கட்டில் விடப்படுவது இது போன்ற காயடிக்கப்படாத நாட்டுமாடுகள் தான்.
வட இந்தியா மற்றும் கர்நாடகாவில் நடைபெறும் மாட்டுவண்டிப் பந்தயங்களில் பயன்படுத்தப்படுவது எல்லாமும் காயடிக்கப்பட்ட மாடுகளே!
எனவே தான் பீட்டா இந்த நாட்டுமாடுகளைக் குறிவைக்கிறது. இந்த மாட்டினத்தை முற்றிலும் அழிக்காவிட்டால் அவர்களால் கலப்பின மாடுகளை  இங்கே இறக்கமுடியாது. கலப்பின மாடுகளுக்கு மேய்ச்சல் உணவு போதாது. அதற்கு தீவனம் வைத்தாக வேண்டும்.
உலகின் மிகப் பெரிய மாட்டுத்தீவன மற்றும் ஊக்க மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனம் பீட்டாவின் பின்னணியில் இருக்கிறது என்பதே உண்மை.
அவர்கள் கண்ணை தமிழகத்தின் மூன்றரை இலட்சம் கோடிகள் கொண்ட  பால் உற்பத்தி சந்தை உறுத்திக்கொண்டே இருக்கிறது. ஜல்லிக்கட்டை நிறுத்தாவிட்டால் அவர்களால் இங்கே காலூன்றவே முடியாது.
அதனால்தான் அவர்கள் இந்த வீரவிளையாட்டை மிருகவதை என்ற பெயரில் முடக்க தீவிரம் காட்டுகிறார்கள் !

பீட்டா பற்றி நீ அளித்த தகவல் மிகவும் பயனுள்ளதே.
நாம் நமது கால்நடைச் செல்வம் உலகில் முதலில் இடம்பெறுகிறது என்பதிலோ, அதை அந்நிய நாட்டின் சக்திகள் முடக்கி வியாபார யுத்தம் செய்வதையோ ஏற்பவனல்ல.

 

ஆனால் என்னைப் பொறுத்தவரை நம்மால் ஜல்லிக்கட்டு என்பது மட்டும் சரியா தவறா என்ற கோணம் தான். உயிர்க்கொல்லி விளையாட்டு அதிலும் மனித உயிர் பிரிவது இந்த காரணத்தால் விளையாட்டு வினையாக வேண்டுமா என்ற ஒரு கேள்வி மட்டும்தான்.ஆட்சேபணைக்குரியதாக என்னுள் எழுகிறது. அந்த உயிர்களை இழந்து போகும் குடும்பங்களுக்கு இதை ஆதரிக்கும் சக்திகள் என்ன இழப்பீடு செய்ய முடியும என்பதுதான்.எனக்கு சமாதானமளிக்காமல் இருக்கிறது.

எனவேதான் இதெல்லாம் தெரிந்தே தேவையா என்று எழுதி இருக்கிறேன்.
மற்றபடி வெளிநாட்டாரின் சூழ்ச்சி எல்லாம் எப்போதுமே நம் இந்தியாவிடம் பலிக்காது.ஏன் எனில் இங்கேயே 1 ஆம் வகுப்பு மட்டுமே படித்தவர் தலைமை ஆசிரியராரக பல ஆண்டுகள் பணி புரிவதும், போலி சான்றிதழ் பெற்றே பாதுகாப்புப் படை பணியில் இருப்பதும்,போலி மருத்துவர்கள் இருப்பதும் வட்டாட்சியர் வெறும் 100 இலஞ்சம் பெற்று நிரூபிக்கப்பட்டு 3 ஆண்டுகள் சிறைவாசம் பெறுவதும் , காசுக்கு சாதி சான்றிதழ் தருவதும், போக்குவரத்து, பொதுப்பணித்துறை, இப்படி எல்லா துறைகளும் மத்தியிலும் மாநிலத்திலும் துரோகிகளும் புல்லுருவிகளும் நிறைந்து கிடக்கிறார்கள். நமது தமிழ் மாய்ந்து கிடக்கிறது ஆனால் நாம் மண்ணின் மணம், வீரம் என்று எல்லாம் அரசியல் வாதிகள் பின்னால் அவர்கள் தூண்டலில் சிக்கும் தூண்டில் புழுவாய் சிக்கித் தவிக்க ஆவல் பீறிட முழங்குகிறோம்.

 

நாம் நமது நாட்டு மாடுகளையே வீரியமுடன் வைத்திருப்போம், உயிர் போகும் ஜல்லிக்கட்டு தவிர, மஞ்சு விரட்டு, பொலி காளை /எருது ஆட்டுதல், வண்டிப் பந்தயங்கள் ஏன் வாரம் ஒரு நாளைக்கு வாகனப்போக்குவரத்தே நிறுத்தப்பட்டு மாட்டு வண்டி, குதிரை வண்டி போன்ற பழைய முறை மட்டுமே பயன்படும் வண்டிகள் மட்டுமே பயன்பட வேண்டும் என்ற முறைகள் பழக்கத்துக்கு வந்தாலுமே மகிழ்வடைந்து வரவேற்கிறேன்.அப்படி எல்லாம் இந்த அரசால் செய்ய முடியுமா? அப்படி செய்தாலும் அது நல்லதே.

 

அதே போல நமது விவசாய வாழ் முறைகளில் கால்நடைகளின் பயன்பாடு திரும்பவும் நம்மாழ்வார் சொன்னபடி மறு சுழற்சி முறைக்கு சென்று நமது தாய் மண் செறிவூட்டப்பட்டு செயற்கை முறை,இரசாயன உரங்கள் கலக்கப்பட்டு மலட்டுத்தன்மை ஏற்படாதிருந்தாலும் நல்லதே.

எனவே நான் சொன்ன கருத்து ஒன்றே ஒன்றுதான் இந்தியா எங்கும் கால்நடைகள் இருக்கின்றன. இந்தியாதான் கால்நடைச் செல்வத்தில் உலகில் முதலாவது நாடு. அதை அப்படியே பேணுவோம். ஆனால் ஜல்லிக் கட்டு நடத்தி மனித உயிர் போவது என்பதை தவிர வெறெல்லாம் நல்லதுதான்.

மேலும் தமிழ்நாடு எல்லா பகுதிகளிலுமே இந்த ஜல்லிக்கட்டு கொண்டாடப்படுவதுமில்லை. இதில் சாதியமும் விளையாடுகிறது என்ற கருத்தும் வாதமும் இருக்கின்றன.

மொத்தத்தில் ஒரு அருமையான ஆரோக்யமான விவாதத்துக்கு என்றுமே நாம் தயாராக இருக்கவேண்டும். நானும் தயாராக இருக்கிறேன்.எனவே இந்த இரு கருத்துகளையுமே நான் எனது டான்பேஜஸ்(விடியலின் பக்கங்களில் )டாட் காமில் பதிவிடுகிறேன்.

மேலும் குவைத்தில் இருக்கும் உனக்கு இங்கிருந்து பொங்கல் வாழ்த்தை சொல்வதில் உண்மையிலேயே எனக்கு வருத்தம் இருக்கிறது.

 

 

தேவைப்பட்டால் மெயிலில் மட்டுமல்ல இந்த வலைப்பூவிலும் நீயும் ஏன் மற்றவர்களும் கூட நேரிடையாக எவரும் வார்த்தையாட வரலாம் அவற்றை பிரசுரிக்கத் தயாராக இருக்கிறேன். நம் விவாதத்தால் ஏதாவது நன்மை விளைந்தால் , கருத்துப் பரிமாற்றத்தால் எண்ணங்கள் விசாலமடைந்தால் அது அனைவருக்கும் நல்லது. நமக்குள்ளும் ஒரு புரிதல் ஏற்பட உதவும்.

நன்றி
வணக்கம்.

அனைவர்க்கும் எனது மனக்குறையுடனான பொங்கல் வாழ்த்துகள்.
ஆனால் ஒன்றே ஒன்று ஏழை பாளை கூட பொங்கல் வைக்குமளவு கடந்த பல ஆண்டுகளாக தமிழக அரசே பொங்கல் அரிசி, அஸ்கா போன்றவற்றை வேட்டி சேலையுடன் வழங்கி வருவதில் எனக்கு மகிழ்வே. ஏன் எனில் இது கூட இல்லாமல் பொங்கல் விழாவை ஒரு சில வாரம் தள்ளி வைத்துக் கொண்டாடிய ஏழ்மைக் குடும்பமாக இருந்து வளர்ந்த குடும்பங்களுள் எங்களுடையதும் ஒன்று.இலவசமாக இதெல்லாம் வேண்டுமா இந்த இலவசம் சரியா என்ற கருத்துகளும் உண்டு. மேலும் இந்த 100 ரூபாய் அப்படியே அரசு மதுபானக் கடைக்கு சென்று விட இதெல்லாம் ஏன் கொடுக்கப்பட வேண்டும் என்ற கருத்து வாதங்களும் உண்டுதான்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

பீட்டா பற்றிய உனது கடிதமும் எனது ஒரு பதிலும்…

Advertisements

4 responses

 1. Pingback: ஜல்லிக்கட்டு தடைக்கு பின்னால் இயங்கும் பீட்டாவின் அபாய முகம் கடிதமும் எனது ஒரு பதிலும்… கவிஞ

  • thanks Ka Vadivel for your sharing of this post vanakkam.please keep contact as usual.

   January 15, 2016 at 3:13 pm

 2. Anand

  அடுத்த புயலுக்கு சென்னையும் கடலூரும் தாங்குமா? ஊரெங்கும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நீர்நிலைகளை எப்படி மீட்பது? அடுத்த தேர்தலிலாவது நேர்மையான ஒருவரை தேர்ந்தெடுக்க நமக்கு திராணி இருக்கிறதா? வளர்ந்து வரும் சாதி, மத அடிப்படைவாதங்களை எப்படி அடக்குவது போன்ற தேவையற்ற பிரச்சனைகள், விவாதங்களை காட்டிலும் நமது பண்பாடு, கலாச்சாரம், புண்ணாக்கு போன்றவற்றை காக்கவேண்டிய இக்கட்டான கட்டாயத்தில் தமிழகம் இருப்பதால் ஜல்லிக்கட்டு பற்றி நானும் எனது கருத்தை கூறவேண்டியது அத்தியாவசியமாகிறது. ஏறு தழுவுதல், மஞ்சு விரட்டு, ஜல்லிக்கட்டு மற்றும் பலவிதமாக நடத்தப்படும் இந்த வீர விளையாட்டுகள் குறித்து பேசும்போதெல்லாம் எனக்கு தோன்றுவது என்னவோ, இவைகள் யாவும் இதை வீர விளையாட்டு என எவ்விதம் வகைப்படுத்துகின்றனர் என்பது தான். பல நூறு வருடங்களுக்கு முன்னர் விவசாயம், வாணிபம் தாண்டி வேறு தொழில்கள் நம்மிடம் இல்லை. ஆகையால் பொழுதுபோக்க வேண்டிய கட்டாயத்தில் சில பல விளையாட்டுகள் கண்டறிந்தோம். அவற்றுள் உயிரை பணையம் வைத்து விளையாட்டுகளை ‘வீர விளையாட்டு’ என வகைப்படுதினோம். ஆனால், அது மனிதன் தன் அறிவை அதிகம் பயன்படுத்திக்கொள்ளாத காலம். மாறாக கடந்த 200 ஆண்டுகளில் மனித சமூகமாக நாம் மிகப்பெரும் வளர்ச்சியை கண்டுள்ளோம், மனிதம் அறிவு முதிர்ச்சியை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. அரசனும், அடிமை ராஜ்ஜியமும் வீழ்ந்து, மக்களாட்சியை கொண்டுவந்துள்ளோம். 1000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த வீரமென்பது தற்போது வன்முறை. அப்போது போர் என்றால் பெருமை, தற்போது போர் ஒரு பெரும்சோகம். இதை அறிவுப்பூர்வமாக உணர முடிந்தால் ஜல்லிக்கட்டுக்கு இவ்வளவு தூரம் நாம் மெனக்கெட தேவையில்லை. ஆனால், என்னுடைய குழப்பம் எல்லாம் மேற்கூறிய அறிவு வளர்ச்சி, மக்களாட்சி போன்றவை தமிழத்திற்கு பொருந்துமா என்பதுதான். சுயசாதி கர்வமும், அதற்காக மேற்கொள்ளும் கொலைகளும், கலவரங்களும் இங்கே இன்றும் வீரமாக கருதப்படும் போது ஜல்லிக்கட்டு வீரவிளையாட்டு என கொள்வதில் பெரிதாக கருத்துப்பிழை ஒன்றுமில்லை எனவே தோன்றுகிறது. என்னடா, ஜல்லிக்கட்டு ஆதரிப்பவர்களை சாதிவெறியன் என்கிறாயா? என நீங்கள் கேட்டால், தமிழர் மரபு எனப்படும் இதை எத்தனை சாதியினர் இபோட்டியை நடத்துகின்றனர், பங்கேற்கின்றனர் என்பதை உற்றுநோக்குங்கள் என்பேன். ஆம் என் அடுத்த சந்தேகம், இது தமிழர் விளையாட்டு தானா என்பது தான். மதுரை மண்டலத்தில் வாழும் ஒன்று அல்லது இரண்டு ‘ஆதிக்க சாதியினர்’ 100க்கும் குறைவான கிராமங்களில் நடத்தும் இதை எப்படி தமிழர் பண்பாடு என ஏற்பது? வேண்டுமென்றால் அந்த சாதிக்கான பண்பாடு எனலாம். ஒருசில தாழ்த்தப்பட்ட சாதியினரும் தற்போது ஜல்லிக்கட்டில் பங்கேற்பதெல்லாம், அரசியல் சாசனம் மற்றும் பொருளாதார வளர்ச்சியால் சாத்தியப்பட்டதே தவிர ஒரு 30-40 ஆண்டுகாலம் பின்னோக்கி பார்த்தல் இதுவெறும் சாதி சார்ந்த போட்டிகள் மட்டுமே என்பதை புரிந்துகொள்ளலாம். இதற்கு நல்ல உதாரணம், இன்றும் ஜல்லிக்கட்டு என்பது குறிப்பிட்ட ஆதிக்க சாதியினர் வாழும் பகுதிகளில் மட்டுமே கடைபிடிக்கப்படுவதை காணலாம். இன்னும் குறிப்பிட்டு சொல்லப்போனால் இந்த வருடம் இப்பிரச்சனை அதிகம் அரசியலாக்குவதே அந்த சமூகத்தினரின் ஓட்டு வங்கிக்காக தான். தவிர, என்னை பொறுத்தவரை பீட்டா வந்து தான் இதை நிறுத்தவேண்டும் என்பதில்லை. 10 வருடம் விட்டிருந்தால் ஜல்லிக்கட்டு தானாகவே காணாமல் போயிருக்கலாம் அல்லது வேறுமாதிரியான மாறுபாட்டை சந்தித்து இருக்கலாம். தமிழகம் மேற்கொண்டு வரும் நகரமயமாக்கல் அத்தனை அதிவேகமானது. என்ன தான் இருந்தாலும் 1000 ஆண்டுகால நடைமுறை நிறுத்தலாமா என்கிறீர்களா? 1000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த பல கலாச்சார காட்டுமிராண்டித்தனமான பழக்கங்களை நாம் விட்டோழித்துள்ளோம். அதில் ஜல்லிக்கட்டும் இணைந்தால் இங்கே பெரிதாக எதுவும் மாறிவிடப் போவதில்லை. மொத்தத்தில் என்னுடைய கருத்து ஜல்லிக்கட்டு நடத்தவே கூடாது என்பதல்ல. முன்னமே சொன்னது போல நாம் தலையில் வைத்து கொண்டாடும் அளவுக்கு அது ஒன்றும் மிக முக்கியமான பிரச்சனை இல்லை. நம் உடனடியாக கவலை கொள்ள பல பிரச்சனைகள் இருக்கிறது. நமது ஆற்றலை, நேரத்தையும் அறிவார்ந்த செயலுக்கு பயன்படுத்தலாம். ஒரு குறிப்பிட்ட சாதியினர், தங்களது சாதியின் ‘வீரமாக’ கருதும் ஒரு நிகழ்விற்கு என்ன ஏதுவென்றே தெரியாமல் கண்டமேனிக்கு கருத்து சொல்லாதீர்கள் என்பது தான் நான் சொல்லவருவருவது. முக்கியமாக அடுப்படிக்குள், கேஸ் அடுப்பில் பொங்கல் வைத்து கொண்டாடுவோர் ஜல்லிக்கட்டு மூலமாக மட்டுமில்லாமல் தமிழர் பண்பாட்டை, நெறிமுறையை உங்கள் வீட்டிலிருந்து கூட காப்பாற்றலாம். செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? பின்குறிப்பு: கலப்பின பசு, நாட்டு மாடுகள் என அடிப்படை அறிவுகூட இல்லாமல் பார்வர்டு மெசஜ் அனுப்பும் இணைய புரட்சியாளர்கள் குறித்து அடுத்த பதிவு விரைவில்..!

  January 16, 2016 at 4:04 pm

  • superb Anand thanks for your feedback on this post. vanakkam. keeep contact. I am publishing your feedback writings in my blog.

   January 16, 2016 at 5:23 pm

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s