Just another WordPress.com site

இந்திய உச்ச நீதி மன்ற தீர்ப்பாணையும் மக்கள் மன்றங்களின் நடப்பாணியும்:கவிஞர் தணிகையின் 1161 ஆம் பதிவு

இந்திய உச்ச நீதி மன்ற தீர்ப்பாணையும் மக்கள் மன்றங்களின் நடப்பாணியும்:கவிஞர் தணிகையின் 1161 ஆம் பதிவு

மறுபடியும் பூக்கும்

 

கர்நாடகா அரசு உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காத மக்கள் தமிழகத்துக்கு நீர் விடுவதை எதிர்த்து தடுத்தபோது ஒன்றுமே செய்ய வில்லை, செய்ய முடியவில்லை.கேரளாவிலும் மக்கள் மனங்களும் முல்லைப் பெரியாறில் மூழ்கிக் கிடக்கின்றன நீதி மன்ற ஆணைக்கும் புறம்பாக, மேலும் அய்யப்பன் பெண் சமத்துவ பக்திப் பெருவெளிகளில்,

இன்று தமிழக ஜல்லிக்கட்டு பீட்டா தடுப்பாணையாக உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தபோதும் மக்கள் உணர்வுப் பூர்வமாக ஜல்லிக்கட்டு மீறி நடத்த வேண்டும் என்ற அவாவை மேலிட்டு எடுத்துச் செல்கிறார்கள். தீக்குளித்து ஒரு இளைஞர் பேர் ரமேஷ் இறந்தும் இருக்கிறார்.மேலும் தமிழ்நாட்டின் சிவகங்கை பள்ளிக்கரணை போன்ற இடங்களிலும் பல தென்னகத்தின் பகுதிகளிலும் உச்ச நீதி மன்றத்தின் தடை மீறி இந்த வீர விளையாட்டு நடைபெறுவதாக நடைபெற்று வருவதாக, நடத்தப்படுவதாக செய்திகள் வந்து கொண்டிருப்பதாக எமது முக நூல் நண்பர்கள் தெரிவித்துள்ளார்கள்.

ஆக இதெல்லாம் எதைக் காண்பிக்கிறது எனில் மக்கள் நீதி நாட்டின் உச்ச நீதி மன்றத் தீர்ப்பை உதறித் தள்ளுவதைக் காட்டுகிறது. மக்கள் மட்டுமல்ல அரசுகளும் அதன் பின் நின்று உச்ச நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்தை செய்துவருவதை படம் பிடித்துக் காட்டுகிறது. நீதிமன்றங்களும் சல்மான் ,சஞ்சய் தத், காஞ்சி சங்கர மடம், சிதம்பரம் நடராஜர் கோயில், பீட்டா, ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கு போன்றவற்றில் மக்களுக்குத் தெளிவாக தெரியும் வண்ணமே ஆளுக்கு தகுந்த நீதியை வழங்கி வருவது அனைவருக்குமே வெளிச்சமாக்கி நீதியின் பால் உள்ள பற்றை அறவே நீர்த்துப் போக செய்துவிட்டது. ஏன் தனிமனிதர்களே கொலை, கொள்ளை , விதிமீறல் சட்டமீறல் என எல்லாத் துறைகளிலும் பொதுமக்கள் பிரிவிலும் அன்றாடம் செய்து கொண்டு தானே இருக்கிறார்கள்….ஆனால் அப்படி தனியாக செய்யும்போது அது வேறு தனிப்பட்ட குற்றம், கூட்டமாக செய்யும்போது வேறு, இயக்கமாக செய்யும்போது சட்ட மறுப்பு நீதி புறக்கணிப்பு.தியாகம், போராட்டம், நாட்டுப்பற்று, மொழிப்பற்று, இனப்பற்று இப்படி பல பேர்களில்

இந்நிலையில் எதையெல்லாம் மக்கள் , பெருவாரியான மக்கள் வேண்டும் என்று சென்டிமென்ட்டாக உணர்வு அலையில் இருக்கிறார்களோ அவற்றில் ஏதோ ஒரு காரணம் பற்றி மாறுதலான குழப்பம் விளைக்கும் எதிரிடையான தீர்ப்புகளை சொல்லி விடுகிறது நீதியும் நீதிமன்றங்களும்.. சமரசப் போக்கோ அல்லது கலவரம் தவிர்க்கும் படியான தீர்வுகளோ, ஆய்வறிக்கைகளோ அதில் ஏதும் தொனிப்பதில்லை.

 

நீதியும் அந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதியின் தன்மை, மேன்மை, மென்மை பற்றியே பொருத்து அமைகிறது. சந்துரு, குன் ஹா தற்போது கோவில் ஆடை ஒழுங்கணிதல் பற்றி தடை செய்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை,அய்யப்ப சாமி வணங்க பெண்களுக்கும் சம உரிமை போன்ற தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலான கேரள அரசுக்கும் தேவசம் போர்டுக்கும் விளக்கம் அளிக்க நோட்டீஸ்,இதில் எல்லாம் நீதி இருக்கிறது .மக்களுக்கு ஆதரவளிக்கும் போக்கு இருக்க இவற்றை ஆதரிக்கலாம். ஆனால் இந்த வழக்கை பெண்களுக்கு ஆதரவாக கையில் எடுத்திருக்கும் வழக்கறிஞருக்கு மிரட்டலாக 500 தொலைபேசி மிரட்டல்கள் அமெரிக்காவிலிருந்து…இப்படியே போகிறது…இதை எப்படி ஆதரிப்பது?

ஏன் தமிழக அரசே கூட உச்ச நீதிமன்றம் சொல்லியும் சாலையோரத்தில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள் விஷியத்தில் செவி சாய்க்கவேயில்லை. எனவே இந்த நாட்டின் சட்டம் தொடர்புடைய பாராளுமன்றம், சட்டமன்றம், நீதி தொடர்புடைய உச்ச நீதிமன்றம, நிர்வாகம் தொடர்புடைய பிரதம மந்திரி, முதன் மந்திரிகள், குடியரசுத் தலைவர், மாவட்ட ஆட்சித்தலைவர்கள்(அம்மா சொல்லிதான் மழை பெய்கிறது என்றவர் பெயர் கட்சிக் கொடி வண்ணங்களுடன் அச்சடித்த போஸ்டர்களில் இருக்குமளவு இருக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் முதல்…) மேலும் மக்களாட்சியை அமல்படுத்த ஒரு மிக முக்கியமான தேர்தல் எந்திரங்கள் எதுவுமே சரியான சக்தி படைத்ததாகவோ மதிப்பு உள்ளதாகவோ மக்கள் மனங்களில் இடம் பெறவில்லை.

 

இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையரே கடந்த பாரளுமன்றத் தேர்தலில் சுமார் 79 கோடி பேர் பதிவு செய்திருந்த வாக்குகளில் 30 கோடி வாக்குகள் போடப்படவே இல்லை என வருத்தப்பட்டிருக்கிறார். இது சுமார் ஒரு ஆண்டிற்கு முன் நடந்த விஷியம். எனவே தேர்தல் பற்றிய மதிப்பு மிக்க கண்ணோட்டமும் இதுதான் மக்களிடையே.

சட்டம் நீதி, நிர்வாகம் , அடுத்து நாலாவது தூணான ஊடகம,செய்தி பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், வானொலிகள், இதில் பெரும்பாலும் அவரவர் கட்சிக்கொரு பிரச்சார பீரங்கிகளாக தொலைக்காட்சியும் பத்திரிகையும் மக்களை அவரவர் சார்பாக குழப்பி வர பெரும்பாலும் அரசு சார்ந்த ஊடகம் அதாவது தொலைக்காட்சில் வானொலி யாவும் ஆளும் கட்சிக்கு ஆதரவாக ஆளும் அரசின் பிரச்சார சங்குகளாகவே இருக்கின்றன.

மீறி இதை எல்லாம் எழுதும் சமூக வலைதளங்கள் கூட முன்னறிவிப்பின்றி,மறுபடியும் பூக்கும்.வேர்ட்பிரஸ்.டாட்காம் போல முடக்கப் பட்டு விடுகின்றன. ஆக சட்டம், நீதி, நிர்வாகம், ஊடகம் எல்லாவற்றின் மேலும் மக்கள் நம்பிக்கை இழந்து வருவதை நாட்டின் பொறுப்புள்ள மக்கள் உணரவேண்டிய நிலை உள்ளது அதை எடுத்துக்காட்டவே இந்த பதிவு.

 

ஆனால் இதை எல்லாம் கவனித்து மக்களுக்கு நல்லது செய்து தரவேண்டிய மக்கள் பிரதிநிதிகளில் பெரும்பாலானவர்கள் குற்றப்பின்னணியுடன் மட்டுமே இருக்கிறார்கள். தேர்தல் முறைகளில் பங்கு கொண்டு வெற்றியும் பெறுகிறார்கள். அதை எல்லா வித குயுக்தி,தந்திரம், அணுகுமுறை போன்ற எல்லா விதமான தவறான முறைகளிலும் செய்து வருகின்றனர் என்பதுதான் வேதனைக்குரிய நடவடிக்கைகள்.

அப்படிப்பட்ட குற்ற நடவடிக்கை உள்ளவர்கள் மட்டுமே வெற்றி அடையும் மக்களாட்சி முறையில் இந்தியா சிக்கி சீரழிந்து வருகிறது.
எனவே சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில், தேர்தல், மக்கள் பிரதிநித்துவ அமைப்புகள்,நீதிமன்றங்கள், ஊடகங்கள், யாவுமே மக்களுக்கான சக்தி என்பதாக இல்லை என்பதே உண்மை. இதை எல்லா ஊடகங்களிலும் இருந்து அவ்வப்போது காலப்போக்கில் நமக்கு கிடைக்கும் செய்திகளில் இருந்தே நாம் கண்டு கொள்ள முடியும் இதற்கு எல்லாம் பெரிய ஆய்வு மனப் பாங்கு ஏதும் தேவையில்லை.

 

ஜல்லிக்கட்டு என்ற விளையாட்டு வினையில் உயிர் போகாமல் இருக்க வேண்டும் என்பதே எமது கவலை எல்லாம். மாறாக தீக்குளித்து மாள்வதை எல்லாம் எப்படி நாம் சகித்துக் கொள்ள முடியும்.

 

 

இதே போல ஜல்லிக்கட்டுக்கு ஆதரவளிப்பது போல ஈழத் தமிழர் பிரச்சனையிலும் தமிழகம் ஒன்றிணைந்து ஒருங்கிணைந்திருந்தால் தமிழகத்தின் எல்லாப் படகுகளிலும் மக்கள் ஈழம் நோக்கி உயிரைப் பணயம் வைத்து உயிரைத் தியாகம் செய்த விடுதலைப் போராட்டத் தியாகிகள் போல துணிந்திருந்தால் ஒருவேளை தமிழ் ஈழத்தின் அத்தனை இலட்சக்கணக்கான தமிழின உயிர்களும் மாய்ந்திருக்காதோ! என்ற ஒரு கேள்வி இயல்பாக எம் முன் எழுகிறது.

இந்தப் பதிவில் எந்த வித உள் நோக்கமும் இல்லை. எந்த சாயமும் பூசி பதிவைக் கேவலப்படுத்த வேண்டாம். ஏன் எனில் மக்களை நெறிப்படுத்தவும், மக்களை மக்களாட்சியை முறைப்படுத்தவும் நாட்டை முன்னெடுத்துச் செல்லும் கடமையும் ஒவ்வொரு பொறுப்புள்ள தனி மனிதருக்கும் உண்டு . என்ற ஆதங்கத்தில் மட்டுமே இந்த பதிவு . இதை கருத்து சுதந்திரத்தை மீறிய வெங்காயம் என்று இப்போது எழுதிக் கொண்டிருக்கும் இந்த தளத்தையும் எவரும் புகாரளித்தோ கருத்து தெரிவித்தோ முடக்கும் முயற்சியில் ஈடுபட்டு விட வேண்டாம். கருத்துப் பகிர்தல்கள் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் அது வளர்ச்சிக்கு வித்திடும் அது பிறரின் வளர்ச்சியை நல்லதை நோக்கி பொறாமை கொண்டு தடுத்து விடுவதாய் இருக்கக் கூடாது.

முடியவே முடியாது
என்ற களங்களில்தான்
என் வெற்றியே நிகழ்ந்திருக்கிறது

பூக்கள் உதிர்ந்து விட்டாலும்
செடி காத்திருக்கிறது
அது மறுபடியும் பூக்கும்

மறுபடியும், மறுபடியும் பூத்திருக்கிறது…

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s