Just another WordPress.com site

நேதாஜி சுபாஷ் சந்திர போஷ் மரணம் பற்றிய புதிய ஆவணம்: கவிஞர் தணிகையின் 1163 ஆம் பதிவு.

நேதாஜி மரணம்: புதிய ஆவணத்தை வெளியிட்டது இங்கிலாந்து இணையதளம்

நேதாஜி சுபாஷ் சந்திர போஷ் மரணம் பற்றிய புதிய ஆவணம்: கவிஞர் தணிகையின் 1163 ஆம் பதிவு.
மறுபடியும் பூக்கும்

நேதாஜி சுபாஷ் சந்திர போஷ் மரணம் பற்றிய ஒரு ஆவணப்படுத்த வேண்டிய பதிவு.எனவே அப்படியே இணைத்துக் கொள்கிறேன். அவர் விமான விபத்தில் அடைந்த காயம் காரணமாகவே உயிரிழந்தார் என அவரது உறவினர் தமது இணைய தளத்தில் ஆவணத்துடன் வெளியிட்டிருக்கிறார்.அந்த தளத்தின் பெயர் போஸ்பைல்ஸ் இன்பர்மேஷன் என்பதாகும்.

நாட்டின் மிகப்பெரும் ஆற்றல் மறவர் பற்றிய செய்தியை பகிர்ந்து கொள்வதில் நமது வலைப்பூ மறுபடியும் பூக்கும் பெருமை அடைகிறது.

விமான விபத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக தான் நேதாஜி உயிரிழந்தார் என்று இங்கிலாந்து இணையதளமான http://www.bosefiles.info வில் இன்று வெளியான ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.
சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் தேதி தைவானில் நடந்த விமான விபத்தில் இறந்து விட்டதாக கூறப்பட்டாலும், நேதாஜி பற்றிய மர்மம் இன்னும் நீடித்து வருகிறது. இதுபற்றிய ரகசிய ஆவணங்கள் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை.
இங்கிலாந்தை மையமாக கொண்டு இயங்கும் http://www.bosefiles.info என்ற இணையதளம் நேதாஜியின் மரணம் குறித்த பல்வேறு ஆவணங்களை வெளியிட்டு வருகிறது. இந்த இணையதளத்தை பத்திரிகையாளரும், நேதாஜியின் உறவினருமான ஆஷிஸ் ரே நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த இணையதளம் இன்று வெளியிட்ட ஆவணத்தில் விமான விபத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக தான் நேதாஜி உயிரிழந்தார் என்று கூறப்பட்டுள்ளது.
நேதாஜி விமான விபத்தில் தான் உயிரழந்தார் என அவரது நெருங்கிய கூட்டாளி ஒருவர், 2 ஜப்பான் மருத்துவர்கள், மொழி பெயர்ப்பாளர், ஒரு தைவான் செவிலியர் ஆகிய 5 சாட்சியங்கள் உறுதி செய்துள்ளதாக அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.

 

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

நன்றி:வெப்துனியா 16.01.16.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s