Just another WordPress.com site

இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கு ஒரு சிறு மடல்: கவிஞர் தணிகையின் 1165 ஆம் பதிவு

இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கு ஒரு சிறு மடல்: கவிஞர் தணிகையின் 1165 ஆம் பதிவு
மறுபடியும் பூக்கும்

 

ஸ்வச் பாரதம் (தூய பாரதம்) மேக் இன் இண்டியா( இந்தியத் தயாரிப்புகள்) இப்போது ஸ்டார்ட் அப் இந்தியா (இந்தியாவே வீறு கொண்டெழு) இப்படி ஒற்றைச் சொல் முழக்கங்களையே வெற்றுச் சொல்லாக விட்டு விடுதல் நியாயம்தானா? செய்து விட்டால், அதை நோக்கி செயல்பட்டால் சரித்திரம் உங்களைப் போற்றுமே,முதலில் ஒரே திட்டம் நதி நீர் இணைப்பு மட்டும் செய்து விட்டால் எல்லாத் திட்டங்களும் எளிதில் நிறைவேறுமே. இந்திய சரித்திரத்தில் நீங்கள் மாவோ,லெனின்,பிடல்,ஹோசிமின் போன்ற அழியா நீங்காப் பெயர் பெறலாமே?

எல்லாமே வெறும் சொல்லோடு போனால் நீங்கள் எப்படி சரித்திரத்தில் இடம் பெற முடியும்? பத்தோடு ஒன்னு பிரதமர் என்று தானே உங்களையும் உலகு பார்க்கும். பாகிஸ்தான் சென்று வந்தீர் பதன் கோட் விமானத் தளத்தில் 7 விமானப்படை வீரர்களின் உயிர்கள் பாகிஸ்தானிய தீவிரவாதிகளால் பதம் பார்க்கப்பட்டது….

பாகிஸ்தான் பிரதமரின் தாயை, மனைவியை வணங்குகிறீர்கள், ரிலையன்ஸ் முகேஷ் அம்பானியின் மனைவியை வணங்குகிறீர்கள், உங்கள் தாயை பிறந்த நாளன்று எங்கிருந்தாலும் சென்று வணங்குகிறீர்கள், ஏன் எமது அம்மா முதல்வரையும் வந்து போயஸ் கார்டனில் கண்டு விருந்து உண்டு களித்து வணங்குகிறீர்கள், ஆனால் உங்களது மனைவியை கை விட்டு விட்டீர் .அது போனால் போகட்டும் அது உங்கள் தனிபட்ட விஷியமாகவே இருக்கட்டும்.

ஸ்மிர்தா இரானி, சுஷ்மா ஸ்வராஜ், வசுந்தரா ரஜே சிந்தியா போன்றோர் என்ன தவறு செய்திருந்தாலும் கட்சியில் பெண்களுக்கு நல்ல மதிப்பும் மரியாதையுமாக வைத்திருக்கிறீர்கள். மொத்தத்தில் பெண்குலத்தை பேணி பாதுகாக்கிறீர். பாராளுமன்றத்திலும் முதன் முறை புகும்போது அதன் படிகளைத் தொட்டு வணங்கி விட்டுத் தான் வந்தீர். நல்ல மரியாதை. பாராளுமன்றத்தின் மேல். ஆனால் அதன் பழைய கட்டடத்தை இடித்து புதிய பாராளுமன்றக் கட்டடத்தை தோற்றுவிக்க வேண்டும் என சுமித்ரா மகாஜன் பாராளுமன்ற சபாநாயகர் நியாயமாகக் கோருவது வேறு கதை.

ஆக தாய்க்குலத்தின் மேல் எல்லாம் மரியாதை பாராட்டுகிறீர். ஸ்வச் பாரதத் திட்டம் நமது சென்னை,கடலூரில் மழைவெள்ளம் வந்தபோது நமது உலக நாயகன் கமல் தலைமையில் சிறப்பாக பணி செய்யும் என எதிர்பார்த்தோம். அவர்தாம் உங்களின் அந்த திட்டத்திற்கும் தூதர். ஆனால் அவரது மகளுடன் முன்னால் சேர்ந்து வாழ்ந்த சித்தார்த் அந்த பேரைத் தட்டிச் சென்றுள்ளார்.

உமது ஸ்வச் பாரதத்திற்காக எமது பி.எஸ்.என்.எல் பில்லில் வழக்கமாக மாதமொன்றுக்கு எடுக்கும் வரி 100 ரூபாய்க்கும் மேல் தனியாக 3.50 ரூபாய் எடுக்கிறீர் மாதாமாதாம் ஆனால் எமது குப்பை பாரதம் ஸ்வச் பாரதமாகமலே இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு பல மாதங்களாகியும் அப்படியே இருக்கிறது. ஸ்மிர்தா இரானி மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சில பெண்களை சேர்த்துக் கொண்டு இல்லாத குப்பையை பெருக்கியபடி சில பிளாஸ்டிக் பக்கெட்களுக்கு (நெகிழி நீர் வாளிகளுக்கு போதுமா தமிழன்பர்களே) பெயிண்ட் அடித்ததோடு போட்டோவுக்கு போஸ் கொடுத்ததோடு சரி. இப்போது கேரளாவில் விபத்தில் சிக்கிய ஒரு பெண்ணை மருத்துவமனைக்கு இவர் வாகன சாரியில் தூக்கிச் சென்று காப்பாற்றியதாக இவர் பற்றிய ஒரு நல்ல செய்தி அவருக்கும் எம் வாழ்த்துகள்.

 

மேக் இன் இண்டியா என்றீர்கள் , அதற்கு உருவாக்கிய சிங்கம் லோகோ முத்திரைக்கு அல்லது உருவமே அமெரிக்காவில் தயாரானதாக அல்லது வெளி நாட்டில் உருவாக்கியதாக சொல்கிறார்கள். ஏன் உங்கள் பிரதம வேட்பாளர் என்ற ஆரம்ப நிலையிலேயே அமெரிக்க நிறுவனங்களே உங்களுக்கு விளம்பர யுக்திகளை அமைத்து தந்ததாகவும் பெரும்பாலான பணம் ரிலையன்ஸ் மூலம் வந்ததாகவும் செய்திகள் வந்தன. இதெல்லாம் என் போன்ற சிறியோர்க்கு பிறகு எப்படித்தெரியும் ஊடகத்தில் தெரிந்து கொள்வதுதான்…அவ்வப்போது… வரும் செய்திகள் மூலம்.

இப்போது ஸ்டாட் அப் இந்தியா, என்கிறீர். தொழில் துவங்க பல இலட்சம் கோடி கடன், அதிலும் 3 வருடம் ஏதுமே தணிக்கை செய்து கேட்க மாட்டோம், தொழில் துவங்குவதில் தோல்வி அடைந்தாலும் கூட அதை எல்லாம் எப்படி சமாளித்துக் கொள்வது என்றெல்லம் இந்த திட்டத்தில் வழி உண்டு என்றெல்லாம் சொல்கிறீர். உங்கள் திட்டங்கள் எல்லாம் இனிக்கிறது. நன்றாக இருக்கிறது. ஆனால் சர்க்கரை என எழுதி நக்குவது போல…பயன்பாட்டுக்கு இல்லை. தவறாக பணம் போகாமல் இருந்தால் சரி. எல்லாம் மன்மோகனைத் திட்டியவர் எல்லாம் இப்போது அவரை பாராட்டுமளவு உங்களது ஆட்சி இருக்கிறதாம்.அவரது ஆட்சியில் பெட்ரோலியம் பீப்பாய் அதிக விலையில் விற்றபோதும் விலை குறைவாகக் கிடைக்கச் செய்ததாகவும் உங்களது ஆட்சியில் இப்போது மிகக் குறைந்தவிலைக்கு அது கிடைக்கும்போதும் அவரது ஆட்சியில் விற்ற விலையை விட அதிக விலைக்கு விற்கப்படுகிறதாமே உங்களுக்குத் தெரியுமா? நல்லவேளை இந்த ஆண்டு உள் நாட்டில் தங்குவதாக வாக்களித்திருக்கிறீர். இல்லையெனில் அந்த செய்தியை வெளி நாட்டில் நீங்கள் இருக்கும்போது அல்லது விமானப்பயணத்தில் மட்டுமே தெரியப்படுத்த வேண்டியிருந்திருக்கும். எமக்கு மட்டும் எப்படித் தெரிகிறது ? எல்லாம் ஊடகம் செய்யும் சகாயம்தான்.

 

இந்த இந்திய நாட்டில் சட்டம் நீதி எல்லாமே நன்றாகவே இருக்கிறது குறையின்றி பேரளவில். ஆனால் அதை எல்லாம் எவராவது எந்த மாநிலமாவது, எந்த அரசாவது அமல்படுத்தி இருக்கிறதா பிசகாமல் என்றால் அதுதான் இல்லை. அது போலவே உங்கள் திட்டங்களும் வெறும் ஏட்டளவில் பேச்சளவில். இல்லையெனில் இப்போது இந்தியா சுத்தமாகி இருக்க வேண்டும்..

இந்தியாவிற்கு சீனப்பொருட்கள் விளையாட்டுப் பொருள்களாவது குறைந்த பட்சம் இறக்குமதி செய்வது தடுக்கப்பட்டு இந்தியாவுக்குள்ளே மேக் இன் இந்தியா திட்டத்தில் செய்து கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஒரு கண் சொட்டு மருந்து ஜெர்மனியில் இருந்து வாங்கி விட்டு வருகிறேன் ஹோமியோபதி அதன் விலை 145 ரூபாய்.. உலகமயம், தாரளமயம், தனியார் மயம் இதுதான் விதி எனில் எப்படி இந்தியா சுத்தமாகும்? இந்தியாவிலேயே எல்லாம் தயாரிக்கபடும்? ஒரே நேரத்தில் அமெரிக்காவில், பிரான்ஸில், ரசியாவில் போர்விமானங்களும், படைத் தளவாடங்களும் வாங்கும் ஒப்பந்தத்தில் கை ஒப்பம் செய்தபடியே நீங்கள் மேக் இன் இந்தியா என்கிறீர். சுதேசி இயக்கம் என காங்கிரஸ் சுதந்திரத்துக்கும் முன் சொல்லியது போல, பி இன்டியன் பை இண்டியன் எனச் சொல்லிக் கொண்ட பிறகுதான் இந்தியாவில் அந்நிய நாட்டுப் பொருள்களே அதிகம் புழங்குகின்றன.அப்படித்தானா உங்கள் திட்டங்கள் எல்லாம்?ஆனால் இந்தியா ரெயில்வேயில் 4ஆம் இடம் உலக அளவில் பாதுகாப்புப் படையில் 4ஆம் இடம், கால்நடைச் செல்வத்தில் முதலிடம், வானியல் ஆய்வுகளில் முதல் 5க்குள். ஆயுதக் கொள்முதலில் உலகில் முதலில்.

எது எப்படியோ போகட்டும் இதுவரை சொன்னதெல்லாம், நீங்கள் மன் கி பாத் வானொலியில் வீரமாக பேசுவது போல இந்த ஸ்டாட் அப் இந்தியா திட்டத்தையாவது ஒழுங்காக செயல்படுத்துங்கள். என்னைப் போன்ற பணியில் இல்லாத வருவாய் இல்லாத மக்களுக்கு எல்லாம் ஒரு வழி செய்யுங்கள் . தொழில் முனையச் செய்யுங்கள் நல்லதுதான். இதையும் பதவியில் 2 ஆம் ஆண்டில் இருந்து கொண்டு நிறைவேற்றாமல் வெற்று வார்த்தையாக விட்டு விடாதீர்கள். வாழ்த்துகள்.

ஒபாமா இப்படித்தான் மிகுந்த நம்பிக்கை அளித்தார் 10 ஆண்டுகள் முன் .இப்போது பதவி இறங்க சில மாதங்களே.ஆனால் இன்னும் அமெரிக்க உள் நாட்டு துப்பாக்கி கலாச்சாரமும், உலகத் தீவிரவாதமும் அப்படியே உள்ளது.. சொல்லப்போனால் முன்பை விட இவர்காலத்தில் இன்னும் அதிகமாகி விட்டது. ஆனால் அமெரிக்காதான் எல்லாவற்றிலும் நெம்பர் ஒன் என இப்போதும் பேசி வருகிறார். நல்லவர்தான் ஆனால் நல்லவராக இருந்தால் மட்டுமே அரசியலில் வெல்ல முடிவதில்லை. உலகின் பெரிய மதிப்புமிகு பதவி கிடைத்தபோதிலும் நோபெல் பரிசு பெற்றது தவிர வேறொன்றும் உலக அளவில் சாதித்ததாகத் தெரியவில்லை. அவர்கள் நாட்டுக்கு வேண்டுமானால் இரட்டை கோபுரத்தை தகர்த்த பின்லேடனை ஒழித்தது ஒரு சாதனையாக இருக்கலாம்.

அவரைப்போலவே நீங்களும் பதவி இறங்கும் வரை இப்படியே பாடிக்கொண்டே இருந்து விட்டு சென்று விடாதீர் ஏதாவது உருப்படியாக பெயர் விளங்க நிலைக்க ஏதாவது செய்ய இன்னும் 3 ஆண்டு முழுதாகவே இருக்கிறது .கொஞ்சம் யோசனை செய்யுங்கள். செவி சாயுங்கள். இது எமது நாட்டின் மாபெரும் பதவியில் உள்ள ஒரு தலைவருக்கு ஒரு எழை எளிய எந்த வித வருவாயும் இல்லா செல்லாகாசு எழுதுவது….

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s