Just another WordPress.com site

கண்களே,பெண்களே கண் இல்லாதாரை பெண் இல்லாதாரைக் கண்டு கற்றுக் கொள்ளுங்கள்: கவிஞர் தணிகையின் 1166- ஆம் பதிவு

கண்களே,பெண்களே கண் இல்லாதாரை பெண் இல்லாதாரைக் கண்டு கற்றுக் கொள்ளுங்கள்: கவிஞர் தணிகையின் 1166- ஆம் பதிவு

 

மறுபடியும் பூக்கும்

பொறுத்துக் கொள்ள முடியாத நெரிசல் அந்த பேருந்தில். அந்த நபர் பார்க்க மேன்மையானவராக இருந்த போதும் அவரின் கை இருக்கையில் அமர்ந்திருந்த பெண் ஒருவரின் தலையில் பட, அவர் அதை ஏற்காமல் ஆட்சேபிக்க, இவரோ கூட்டம் நிற்கவே முடியவில்லை, அப்படித்தான் படும். என தம் பக்கத்தை நியாயப் படுத்த முயல இவருக்கு முன் நின்று கொண்டிருந்த மற்றொரு பெண்ணும் ஆணுக்கு ஆதரவாகவும் வழக்கம் போல காரில் வர வேண்டியதுதானே, இன்ன பிற சொற்றொடர்களுடன்….

அதற்கு அந்தப் பெண், பெண் மேல் பெண் படுவதற்கும் ஆண் படுவதற்கும் வேறுபாடில்லையா? நீ எதற்கம்மா இப்படி சண்டைக்கு வருகிறாய் என்று கேட்டுக் கொள்ள, பேச்சு வார்த்தை கூச்சலாய் மாறித் தொடர… நிலையை கட்டுக்கு கொண்டு வர வாயைத் திறப்பதற்குள் பேருந்தின், வாகனங்களின் எச்சரிக்கை ஒலி கேட்டு முடிய..காத்திருந்து….சத்தம் ஓய்ந்த பின்,மூடாது திறந்திருந்த வாய் வழியே

ஏங்க நீங்கதான், கையை எடுத்துக் கொள்ளலாம் இல்லையா< அவங்கதான் சொல்றாங்க இல்லையா?

இல்லைங்க முடியலை, என்றவர் கையை மேல் நோக்கிய கூரைக் கம்பியைப் பிடித்துக் கொண்டார். அதுவரை பேசாமல் பின்னால் இருந்த இரு குரல்கள்,இந்த குரலுக்கு ஒத்துப் பாடி, அவரும் தான் அடமாக அப்படியே செய்தால் எப்படி, முன்னால் இருக்கும் பெண்களை இந்தப்பக்கம் விட்டு விட்டு இவர் நகர்ந்து சென்றால் என்ன, என்றனர்.

ஆனால் பேருந்தில் ஆண்களும் பெண்களும் குழு குழுவாகவே நின்று கொண்டிருந்தனர். யாரையும் எங்கேயும் நகரச் சொல்லக் கூட முடியாத நிலைதான். அந்த பேருந்து வழக்கப்படியான நேரத்தில் வருவதற்காக மற்றொரு பேருந்தை எடுத்துக் கொண்டு ஓட்டத்தில் இருந்தது. அன்று நேரத்துக்கு வர வேண்டிய பேருந்து இந்த பேருந்து செல்லும்போதுதான் எதிரில் வந்து கொண்டிருந்தது. அரசு ஊர்திகள் எனவே அனுசரிப்புகள்.இதற்கு முன்னால் விரைவுப் பேருந்துகள் இரண்டு அதிக கட்டணத்துடன், ஒன்று பரவாயில்லை இருக்கைகள் நிறைய மனிதர்களுடன், மற்றொன்று கூட்டமே இல்லாமல் காலியாகவே சென்றபடி இருந்தது…மனிதர்கள் பொருளாதாரம். அரசு ஆட்சி, உலகின் 62 மனிதர்களிடம் மட்டுமே உலக மக்கள் தொகையின் 60% மக்களின் செல்வம் இருக்கிறதாமே புள்ளி விவரங்கள்….

 

மொத்தத்தில் அந்தக் கூட்டம் சென்றடையும் இடம் வரும் வரை அப்படியே தான் சென்றது எவருக்குமே நின்று கொண்டிருந்தாருக்கு இருக்கை கிடைக்கவே இல்லை இடையில் காலியாகவே இல்லை. எப்படித்தான் இந்த பேருந்துப் பயணம் முடித்து பணிக்குச்செல்வோர் சென்று பணி செய்ய முடியுமோ? பாதி தளர்வு, சோர்வு இப்படி சென்று சேர்வதிலேயே முடிந்து விடுகிறது. தொழில் நுட்பம் மிகும் காலத்தில் சமூக உணர்வுகள் மழுங்கவும், சமூக உணர்வுகள் மிகுந்திருந்த காலத்தில் தொழில் நுட்பங்கள் அறிவியல் நுணுக்கங்கள் இல்லாமலும் பயணம் உலகத்தில்…

சேரவேண்டிய இடம் சேர்ந்தது அதற்கு முன் நிறுத்தம், அமர்ந்திருந்தவர் எல்லாம் எழுந்து, இறங்க ஆரம்பித்தனர், அதில் ஒரு விழியிழந்தவர் கையில் குச்சியுடன். நீங்கள் இந்தப் பக்கம் போங்கள் என அவரை வாயிற்படி நோக்கி இறங்க வழி காட்டப்பட்டது.

 

 

இறங்கியவர், வாகன நெருக்கத்திடை குச்சியைத் தட்டி தட்டி, பாதையோரம் சென்று நிற்க முயன்றார். அவர் அருகே வாகனங்களாய் நிற்க…

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s