Just another WordPress.com site

பூரண மதுவிலக்கு சாத்தியமா? கவிஞர் தணிகையின் 1167 ஆம் பதிவு மறுபடியும் பூக்கும்

பூரண மதுவிலக்கு சாத்தியமா? கவிஞர் தணிகையின் 1167 ஆம் பதிவு

மறுபடியும் பூக்கும்

 

1.கள்ளச் சாராயம்,2. கள்,சாராயக்கடைகள்,3.உரிமம் குடிக்க,பர்மிட் மதுக்கடை நடத்த தனியாருக்கு,4.மிகப் பெரிய பார்கள், மாபெரும் ஹோட்டல் லாட்ஜ்களில் மது பானம் விநியோகம்,5.அரசே அந்நிய மதுவை விற்க டாஸ்மாக்,6. மத்திய அரசால் விநியோகிக்கப்படும் பாதுகாப்புப் பணியாளர் மற்றும் ஓய்வு பெற்றவருக்கு இப்படி மது நதிகள் பல வகைப்படும் ஆனால் எல்லாமே வற்றாத ஜீவநதிகள் இந்தியாவில்.

அன்பு நண்பர் ஒரு மடல் அனுப்பியிருந்தார். அதை அப்படியே உங்களுக்குத் தருகிறேன். மேலும் சசிபெருமாளின் உயிர் இந்த மதுவிலக்குப் போராட்டத்தில் போயிருந்ததை கோவன் போன்றோர் கையில் எடுத்தார்கள். சற்றேறக் குறைய இதன் வீச்சைக் குறைக்க 35 ஆண்டுகளுக்கும் மேல் பிரச்சார யுக்திகள் போய்க் கொண்டும் செய்திகளில் இடம் பெற்றும் இடம் பெறாத போதும் யாம் ஆங்காங்கே மதுவிலக்குக்காக போராடியே வருகிறோம்…..

 

N.Selva Kumar

to me

தமிழகத்தில் 1971ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மதுவிலக்கை ரத்து செய்து, அதற்கான அவசர சட்டம் ஒன்றையும் பிறப்பிக்கச் செய்தார் கருணாநிதி.

பல ஆண்டு காலம் அமலில் இருந்த மதுவிலக்கு, திடீரென ரத்து செய்யப்பட்டது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்த, அதையும் கருணாநிதி சமாளித்தார். ‘நான் சூடமாக இருக்கிறேன்: என்னைச் சுற்றி நெருப்பு இருக்கிறது; நான் என்ன செய்வது…?’ என மற்ற மாநிலங்களில் மதுவிற்பனை நடக்கும்போது நான் மட்டும் என்ன செய்ய?  என சாமர்த்தியமாக பதில் அளித்தார் அவர். கருணாநிதியின் இந்த விளக்கம் அவரது முடிவை நியாயப்படுத்தியது.

டாஸ்மாக் நிறுவனத்தை துவக்கியது அரசு

அதன் பின்னர் 1974ம் ஆண்டு மதுவிலக்கு மீண்டும் அமலானது. 1983ம் ஆண்டு எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது, மீண்டும் மதுவிலக்கு ரத்தானது. அதோடு நிறுத்திக்கொள்ளாமல் தமிழகத்தில் மதுவகைகளின் மொத்த விற்பனைக்காக டாஸ்மாக் நிறுவனம் துவக்கப்பட்டது 1983ல் தான். தொடர்ந்து 1987ல் மதுவிலக்கு அமலாகி 1990 முதல் 1991 வரையிலும் மீண்டும் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது. 1991ம் ஆண்டு முதல் முறையாக முதல்வரான ஜெயலலிதா, முதல் கையெழுத்திட்டு மதுவிலக்கை அமலாக்கினார். 2001 வரை மதுவிலக்கு அமலில் இருந்தது.

2001ல் இரண்டாவது முறை முதல்வரான ஜெயலலிதா, மீண்டும் மதுவிலக்கை ரத்து செய்தார். மதுவிலக்கை முதல் கையெழுத்திட்டு துவக்கிய ஜெயலலிதா மீண்டும் மதுவிலக்கை ரத்து செய்த போது, அது கேள்விக்குள்ளாக்கப்பட்டது. அப்போது, “மதுவிலக்கால் கள்ளச்சாராயம் பெருகுவதாகவும், அதனால் மதுவிலக்கை தளர்த்த வேண்டிய அவசியமாகிறது,” என விளக்கம் கொடுத்தது அரசு. ஆனால் மதுவிலக்கை ரத்து செய்ததோடு நிறுத்திக்கொள்ளாமல், 2003ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் அரசு நிறுவனமான டாஸ்மாக், நேரடி மது விற்பனையை துவங்கியது. இதன் பின்னர்தான் மது விற்பனை தமிழகத்தில் கணிசமாக அதிகரித்தது.

 Following  points are vibrations from me

 

 

சற்றேறக் குறைய இதன் வீச்சைக் குறைக்க 35 ஆண்டுகளுக்கும் மேல் பிரச்சார யுக்திகள் போய்க் கொண்டும் செய்திகளில் இடம் பெற்றும் இடம் பெறாத போதும் யாம் ஆங்காங்கே மதுவிலக்குக்காக போராடியே வருகிறோம்…..

என்றாலும் சில விஷியங்களில் நாம் தெளிவாகவே இருக்க வேண்டும். இந்தியாவில் பூரண மதுவிலக்கு என்பதெல்லாம் முடியாத காரியம். ஏன் எனில் 1.விமானப்படை,கப்பற்படை,இராணுவம் போன்றவற்றிற்கு மத்திய அரசு இலவசமாகவும் தள்ளுபடி விலையிலும் கொடுக்கும் மது பணியிலிருக்கும்போதும் பணி ஓய்வுக்கும் பிறகும் அந்த குடும்பத்தார்க்கு எப்போதும் வற்றாத ஜீவ நதியாய் நாடெங்கும், எல்லா மாநிலங்களிலும், நாட்டின் முதல் தர பாதுகாப்புப் பணியில் இருக்கும் அவர்களின் குடும்பங்களுக்குள் மட்டுமல்ல அவர்களின் நட்பு, உறவு எல்லாருக்கும் இந்த வீச்சின் அலை இருக்கிறது பல்வேறுபட்ட குடும்ப சமூக நிகழ்வுகளிலும்.

2. அடுத்து மாபெரும் நட்சத்திர ஹோட்டல்களில் எல்லாம் பார் வசதியும், மதுபான வசதியும் இன்றியமையாத தேவை என்கிறார்கள் நாட்டின் அரசும் கட்சிகளும் அதை நடத்தும் நிர்வாகிகளும் ,அந்த இடத்திற்கு வரும் விருந்தாளிகளும், அதிதிகளும்(அந்நிய நாட்டின் பிரஜைகளும்) அது போன்ற ஒரு விழாவில் ரஷிய விருந்தினர்கள் டாக்டர் அ.பெ.ஜெ அப்துல்கலாம் அவர்களையே அவர் அறிவியல் ஆலோசகராய் இருந்தபோது மது அருந்தச் சொல்லி வற்புறுத்தியது பற்றி அவரே சுஜாதா போன்ற எழுத்தாள நண்பர்களிடம் தெரிவித்து அந்த சம்பவத்திலிருந்து எப்படி வெளி வர முடிந்தது என்பதை எல்லாம் அவரது வாழ்வைப் படிப்பார்க்குத் தெரியும்

மேலும் இந்த நாட்டின் மிகப்பெரும் வியாபார நிர்வாக ஆலை பெரு ஆலை ஒப்பந்தங்கள் நிகழும் இடங்களும், நடிகை நடிகையர் கூடும் இடங்களிலும் நீரின்றி உலகு அமையாது என்று வள்ளுவர் சொல்லுவது போல மதுவின்றி அமையாது அவ்வுலகு

 

3. இப்படி அயல் நாட்டு மதுபானம் நாட்டின் இருபெரும் முக்கிய இடங்களில் புழங்குவது தவிர ஒருக் காலக் கட்டத்தில் மருத்துவர்களே சிலருக்கு அதை பரிந்துரைக்கும் நிலை காரணம் காட்டி உரிமம் தரப்பட்டது அவர்களுக்கு மது கிடைக்க பர்மிட் கொடுக்கப்பட்டு மது பானக் கடைகள் தனியாருக்கு குறைந்த பட்ச எண்ணிக்கையில் அனுமதி கொடுக்கப்பட்டு விற்க அரசு அனுமதிக்க அதை வாய்ப்பாகக் கொண்டு வருவாய்ப் பெருக்கி இலாபம் ஈட்டி நிறைய காசுள்ள பேர்வழிகள் உரிமம் இன்றியே கூட குடிக்க அரசும், காவலர்களும், கடைக்காரர்களும் இந்த ஜீவ நதி சிற்றோடையாக நாட்டில் வழி வகுத்தனர்.

இதெல்லாம் உயர் ரகம் எனச் சொல்லபட்ட அந்நிய அயல் நாட்டின் மதுபானச் சரக்குகள். இவை அவர்களுக்கு மட்டும்தான் கிடைக்க வேண்டுமா? அவர்கள் மட்டும்தான் அந்த சுகானுபவத்தைப் பெற வேண்டுமா என கீழ் தட்டு மக்கள் மதுவை சுவைக்க வேண்டும் என்ற நாட்டமுள்ள மக்கள் கள்ளச் சாராயத்தை நாட, சொந்த மாநிலத்தில் இல்லாத நிலையில் பிற மாநிலங்களிலும் இருந்து கடத்தி வர, மேலும் விஷ சாராயம் காய்ச்சல் பெருக அதனால் உயிர்கள் மடிய….

4. இதையெல்லாம் பார்த்த அரசு ஏன் இதை கள்ளத்தனமாக செய்ய வேண்டும் நலலத் தனம் என நாமே செய்துவிடலாமே என கீழ் மட்ட குடிகாரர்களுக்கு கள், சாராயக் கடையை அவிழ்த்து விட அதுவும் தனியார் கையில் இருந்து கொண்டு அரசு உரிமத்துடன் நடக்க ஆரம்பிக்க நமது குடிமகன்கள் கள்ளையும் சாராயத்தையும் குடித்து விட்டு உள்ளூர் சரக்குதானே விலை குறைவுதானே என மூக்கு முட்ட குடித்து விட்டு வாந்தி எடுத்தபடி, மூச்சு வருகிறதா இல்லையா எனத் தெரியாமல் வீதியில் ஊர்களில் முச்சந்திகளில், சாலைகளில் விழுந்து கிடந்தனர். இந்நிலையில் எல்லாம் பெண்கள் அவ்வளவாக இரசிக்கவில்லை இந்த செயல்களை சில தப்பிப் பிறந்த மகளிர் மட்டுமே இதில் மிகவும் குறைவான எண்ணிக்கையில் ஆண்களுக்கும் சமமாக குடித்து வந்தது மறுக்க முடியாத உண்மைதான்.

(இதனிடையே பாரம்பரியமாகவே கள் இறக்கி தொழில் செய்தவர்களும், தம் தேவைக்கு இறக்கி குடித்து வந்தவர்களும் கிராமங்களில் இருந்து வந்தனர் என்பது வேறு .அதைப்பற்றி நாம் ஆராயப் புறப்பட்டால் அதற்கு ஒரு தனிப்பதிவு தேவைப்படும் . என்றாலும் போதை போதைதான் கள் கள்தான். வள்ளுவர் சொல்வது போல கள்ளுண்ணாமை அதிகாரம் மனிதர்க்கு தேவைப்படுவதுதான். ஆனால் இப்படி எல்லாம் இருக்கும்போது…அரசே அதை கைக்கொள்ளலாமா என்பது தான் கேள்வி.)

5. உண்மைதான் இதை எல்லாம் பார்த்த அரசுதான் இப்படி கண்டும் காணாமல் அனுமதி அளித்த அரசுதான் அது யாராக இருந்தபோதும், எம்.ஜி.ஆர்,கருணாநிதி, ஜெயலலிதா யாராக முதல்வராக இருந்த போதும் அதை ஏன் அரசுக்கு வருவாய் தருவதாக மாற்றி நாட்டு மக்களுக்கு தம்மால் ஆன நன்மையை செய்யக் கூடாது என நாடெங்கும் தாமகவே குடி குடியை கெடுக்கும், புகை பிடிப்பது உடல் நலத்திற்கு தீங்கானது என நீதி மட்டுமே சொல்லி(ல்) வந்த அரசு தாமே அம்மா மருந்தகம், அம்மா உணவகம், அம்மா தகவல் மையம், அம்மா அம்மா அம்மம்மா என இருப்பது போல அரசு மதுபானக் கடை என ஊருக்கு ஒரு ரேஷன் கடை இருப்பது போல ஒரு சிறு கல் கூட உள்ளே போக முடியாத படி இரும்புக் கிராதி கொண்டு அரசு மதுவும் பாட்டிலும் அரசு சொத்து என சொல்லியபடி கடை நடத்தி வருகிறது அரசு மதுபானக் கடையாக..டாஸ்மாக் என… இதைப்பற்றி விளக்க வேண்டியதில்லை. ஏன் எனில் அதன் நாட்டு நடப்பு யாவரும் அறிந்ததே.

 

இவர்கள் அரசு மதுபானத்தை கையில் கொண்டுள்ளது போல புகைப்பதிலும் பெரும் இலாபம் வருகிறதே என வேறு எங்கும் புகை தரும் பீடியோ, சிகரெட்களோ, பான் பராக் பொருட்களோ, போதைப்பொருட்களோ, புகையிலையோ அரசுக் கடை எனப் பேர் போட்டு விற்கலாம இந்த தேர்தல் வெற்றிக்கும் பின்னால். ஏன் எனில் பல இலட்சம் கோடி கடனில் இருக்கும் அரசுக் கஜானாவை நிரப்ப அதெல்லாம் செய்தாலும் சரிதான் என மந்திரியும் ஆளும் கட்சி சரசக்காக்கக்களும் பேசுவார்கள்.

ஏன் எனில் உண்மை, இங்கு மட்டும் இந்த மாநிலத்தில் மட்டும் நிறுத்தி விட்டால் அது முழுதும் நின்றுவிடாது உண்மை. நாம் எங்கிருந்தாவது ஆரம்பியுங்கள் என்றே சொல்கிறோம். பொருள் முதல் வாத அடிப்படையில் கடை இல்லாவிட்டால் அதை வாங்கும் எண்ணமும் அற்றுப் போகும் அல்லது இன்று இற்றுப் போகும் மனிதரின் எண்ணிக்கையிலாவது குறையுமே என்றுதான் அரசே மதுபானக் கடை நடத்துவது தவறு என்று அதை எதிர்க்கிறோம்.

அரசு என்பது உண்மையான அம்மாதான் . குடிமக்களுக்கு என்ன தரவேண்டுமோ அந்த உரியதை மட்டும் தர வேண்டிய அம்மாதான். குடிமக்களை மதுக்குடிமக்களாய் எந்த தாயாவது மாற்ற நினைப்பாளா என்பதுதான் எமது கேள்வி எல்லாம்?

அதனால் விளையும் நன்மை தீமைகளை ஆய்வு செய்யட்டும் அரசும் நிர்வாகமும் அதனால் அழியும் குடும்பம், பொருளாதாரம் ஆகியவற்றை சீரழிவை கருத்துக் கணிப்பு எடுத்த பிறகாவது அரசு இதை விலக்கட்டுமே என்பதுதான் எமது கருத்துப் பதிவு.

பூரண மதுவிலக்கு சாத்தியமே இல்லை என்னும்போது எல்லாமே அழியட்டுமே என வேடிக்கை பார்ப்பவர் எப்படி மாந்தராய் இருக்க முடியும்?

 

நண்பர்கள் சொல்கிறார்கள் மது ஒரு மருந்து, அதை இரவில் சிவப்பு ஒயினாக ஒரு அவுன்ஸ் குடிக்கும் மங்கை 103 வயதுடன் சுருக்கம் தோலில் விழாமல் நன்றாக ஆரோக்யமாக வாழ்கிறார் என…எமது கவலையும் செயல்பாடுகள் யாவுமே விவரமில்லாமல் குடித்து தாமும் மாய்ந்து பிறரையும் மாய்த்து சமூகத்தையும் சீரழிக்கும் அளவுக்கு மிஞ்சிய அளவுக்கு மிஞ்சி குடிக்கும் குடிகாரர்கள் குடிகேடர்கள் பற்றியதே பஞ்சமா பாதகங்களில் படுபாதகமாக விளங்கும் இதை செய்யாதீர் என்பதே. பச்சிளம் குழந்தையைக் கொல்வதை விட, பெண் கற்பழிப்பை விட இது மிகவும் கொடூரமானது என்பதற்கே…

மது நிறைய மருந்துப் பொருட்களில் இருக்கிறதே என்ன செய்யமுடியும் அந்தக் கலவைகளை உயிர் காப்பாற்றுவதிலிருந்து விலக்க முடியுமா லெனின் வெளிநாட்டு மருந்தை உட்கொள்ளாமல் உயிர்போகும் நேரத்திலும் ரஷியாவில் நாட்டுப்பற்றைப் பற்றி பேசிக்கொண்டு என்றும் சொல்கிறார்.

ஏன் சமீபத்தில் கூட பிரேசில் நாட்டில் என நினைக்கிறேன் ஒயினில் ஊறவைத்த கற்றாழையை துண்டுகளாக்கியதை உட்கொண்டால் புற்று நோய் குணமாகிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது உண்மைதான்.

இன்னொரு நண்பர் சொல்கிறார், நாங்கள் என்றுமே அளவுக்கு மேல் மது அருந்துவது இல்லை எங்களை எப்படி இந்தக் குடிகாரர் பட்டியலில் சேர்க்கலாம் என மேட்டுக் குடி மக்களாக…
எல்லாம் சரிதான். இவர்களை எல்லாம் குறை சொல்லவில்லை குறைந்த பட்சம் தற்போதைக்கு ஏதும் சொல்லவில்லை. நாடு எங்கள் கையிலா இருக்கிறது நாங்கள் உடனே நாடெங்கும் மதுவிலக்கை பூரண மதுவிலக்கை அமல்படுத்த…

உயிர்க்கொலைகள்,உறவின் திருகல்கள், நகை திருட்டுகள், நாட்டில் குற்றம் குறைகள் மிகுந்துவிட்டன, எனவே இந்த மது எல்லாவற்றுக்கும் அடிப்படையான பாவமாய் இருக்கிறது அதை மறுக்கமுடியாது அதிலிருந்து வெளிவருவோம் அதற்கு முதலில் அரசு மதுபான வியாபாரியாய் இருக்க வேண்டாமே என்றுதான் சொல்கிறோம்.

பா.ம.க ஆட்சிக்கு வரும் என்பது மதுவை அறவே விலக்குவது எல்லாம் சாத்தியம் இல்லை என்பதும் எமக்கும் நன்றாகத் தெரிந்த ஒன்றே. காந்தியவாதிகளாலே முடியாத போது கட்சி சார்ந்தார் அதை செய்து விடுவார் என்று சொல்வது எல்லாம் சாத்தியமானதாக இருக்காது அப்படி இருந்தாலும் அதை நாட்டில் தெளிவாக எடுத்து நீண்ட நாட்களுக்கு கொண்டு செலுத்துவதும் கடினம்.

,மேலும் குடிகாரர்களை திருத்துவோம், மருந்து என வியாபாரமும் பெருகி உள்ளது ஆங்காங்கே சிறு விளம்பரங்கள் பேருந்து நிற்கும் இடங்களில் எல்லாம் இருப்பதையும் கவனியுங்கள்.

இனி மதுக்கடைகளை முற்றுமாக நிறுத்தும்போது மது அடிமைகளுக்கு மறு வாழ்வு மையங்களும், மருத்துவ மையங்களும் அமைப்பதும் இன்றியமையாத ஒன்றுதான். ஏன் எனில் நாட்டின் சொத்துக்கள் நாட்டின் சொத்தைகளாக மதுவால் காயடிக்கப் பட்டிருக்கின்றன

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Advertisements

2 responses

 1. மதுவின்றி அமையாது உலகு
  அருமையான பதிவு
  தொடருங்கள்

  January 25, 2016 at 4:24 pm

  • thanks for your feedback on this post Raja Sekhar. vanakkam. please keep contact

   January 25, 2016 at 4:38 pm

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s