Just another WordPress.com site

விடிஞ்சாக் குடி அரசு: கவிஞர் தணிகையின்1169 ஆம் பதிவு மறுபடியும் பூக்கும்

விடிஞ்சாக் குடி அரசு: கவிஞர் தணிகையின்1169 ஆம் பதிவு மறுபடியும் பூக்கும்

3 சமத்துவக் கல்வியின் உயிர் பறிப்போடு, தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட கார் எங்கு வெடிக்குமோ என்ற திகிலோடு,குண்டு மழையில் அமைதிப் பேச்சுவார்த்தை எப்படி நடத்த முடியும் என்ற குடியரசுத் தலைவரின் உரையோடு,குடியரசுத் தலைவர் என்றால் அது மக்கள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஒருவரையே குறிக்கும் என்ற நினைவோடு விடிஞ்சா குடி அரசு.

நமது இந்தியா குடியரசாகி வயது 66.நாளை 67ல் அடி எடுத்து வைக்கிறது பிரான்ஸ் தேசத்தின் குடியரசுத் தலைவர் பிராங்கய்ஸ் ஹாலன்டி பிரதம விருந்தினராக கலந்து கொள்ளும் குடியரசு நாளின் அணிவகுப்புடன்.

 

காலை முதல் எமக்குள் எழுதும் நிலையே இல்லை. நாட்டின் அமைதியின்மை போல மனமும் அமைதி இழந்து கிடந்தது பல்வேறுபட்ட சம்பவங்கள் மூலம்.வழக்கமாக செல்லும் நடைப்பயிற்சியும் போக வில்லை. தியான நேரமும் காலையில் பாதியில் தடைப்பட்டு மறுபடியும் மீதியைத் தொடரும்படி அமைந்தது.

நாட்டின் மிக உயரிய பொதுமக்களுக்கு கிடைக்கும் பத்ம விபூஷன் மருத்துவர். வி.சாந்தா அவர்களுக்கு கிடைத்தது மரியாதைக்குரியதுதான். ரஜினிகாந்த் கலை – சினிமா பெற்றது எல்லாரையுமே உறுத்துகிறது.

எழுத்தாளர் ஜெமோ எனப்படும், வெண்முரசு புரவி எழுத்தாளர் ஜெய மோகன் தமக்குக் கிடைத்த பத்மஸ்ரீ பத்ம விருதை புறம் தள்ளி விட்டார் என்பது பெருமைக்குரியதாக இருக்கிறது . வி ப்ரௌட் அபவுட் தட்.

மேலும் விருது விஷியங்களை விடுத்து விஷியத்திற்கு வருவோம். அரசின் எல்லா வித முயற்சிகளையும் செய்து பார்த்து விட்டு 3 கன்னிப் பெண்கள், கல்லூரிப் பெண்கள் கட்டிப்பிடித்துக் கொண்டு கிணற்றில் விழுந்த சோகம் நாட்டின் பெருவியாதியைக் காண்பிக்கிறது.தனியார் மயம், கல்வி நிறுவனங்களின் நிலையைத் தெளிவாக காட்டுகிறது.உண்மைதான் சட்டம், நீதி,நிர்வாகம், ஊடகம் யாவுமே பயனற்று அந்த உயிரற்ற உடல்கள் முன் சிரிக்கிறது.

இந்த சமூக வலைதளங்கள் கூட அனைவர்க்கும் வடிகாலாக மட்டுமே இருக்கிறது . சம்பவங்கள் நடந்து முடிந்த பின்னே அவற்றை நேரடி ஒளிபரப்பு செய்கிறது. இந்தியாவில் கருத்து சுதந்திரம் என்பது எல்லாம் இல்லை. சரி வலைதளம், முக நூல் ,வாட்ஸ் அப் எல்லாமே பாலம் இடுகிற செயலை ஒருவர்க்கொருவர் செய்த போதிலும் அவற்றை சரியாக பயன்படுத்தி ஆர்வமுள்ளவர்களை ஒரு அணியில் கொண்டு வர முடிவதில்லை. அப்படி முயல்வாரை தடை செய்து விடுகின்றனர் அதன் அடிப்படையிலிருந்தே அவர்களை, அவர்களது எழுத்தை, தளத்தை தடை செய்து விடுகின்ற்றனர். ஏதோ ஒரு காரணம் சொல்லி. இது அகிலமெல்லாம் வியாபித்திருக்கும் எல்லா சமூக வலைதளங்களுகும் பொருந்தும். உண்மையில் கருத்து சுதந்திரம் என்பது ஏதுமில்லை. எனது மறுபடியும் பூக்கும் வலைப்பூ முடக்கப்பட்டதும் முகநூல் கூட கட்டுப்படுத்தப்படும் என்ற நிலை எல்லாம் கவலையடைய வைப்பன. மேலும் எமக்கும் ஒரு பின்னணியில் ஒரு இயக்கம் இருந்தால் போராடியிருக்கலாம். எங்கு யாரிடம், என்னவென்றுதான் எதற்காகவென்றுதான் தெரியவில்லை. நல்லவர் நம்பிக்கை நாசமாகும்போது கூச்சலிடுவதில்லை அமைதியாக இருந்து விடுகிறார்கள் என யாரோ எப்போதோ எழுதியதை படித்த நினைவு வருகிறது.

என்றாலும் திரு இரத்தினவேல், கனவுப்பிரியன், வா.மணிகண்டன், கிருத்திகா, இன்னும் பல பேர்கள் இந்த குட்டை சகதியிலும் மீன் பிடித்து தம்மாலனதை செய்தபடி இருக்கிறார்கள் என்பது ஆறுதலளிக்கும் செய்தி.

பல பேர்கள் கட்சி சார்பாக தமது ஊதுகுழல் பயன்படுத்தி வருகின்றனர். காரசாரமாக ஒருவரை ஒருவர் மிருகத்தின் நகம் கொண்டு எழுத்தென பூறிக்கொள்கின்றனர்,கீறிக் கிழித்து தோரணம் விட்டுக் கொள்கின்றனர்.

நாம் நமது கருத்தை அனைவருக்கும் சென்று சேர ஏதாவது முயற்சி மேற்கொண்டால், நீங்கள் வலைதள தர்மத்தை, முகநூலின் கொள்கையை மீறி விட்டீர் என எமது எழுத்துகளை முடக்கி விடுகின்றனர். ஆனால் அழகிய பெண்கள் தங்களது விருப்பை நிறைவேற்றிக் கொள்கின்றனர். ருத்ரன் மொழியில் சொல்லப் புகின் அரிப்பை அடக்கிக் கொள்கின்றனர்.உலகின் மாபெரும் அழிவு சக்தியான பாலியல் படைத்தளங்களும் வலைக்கலங்களும் அழிக்க முடியாததையா எமது எழுத்துகள் அழித்திவிடும்? ஆனால் அவை அழிக்க இவை ஆக்க என்பது தான் அவர்களால் ஏற்க முடியாத செயல்பாடுகள்.

 

இந்தியக் குடியரசுத் தலைவர் ஜஸ்டிஸ் ஈக்வலிட்டி என தமது 18 பாயிண்ட் கொண்ட உரையில் டியர் சிட்டிஜன் எனப் பேசி உள்ளார். சிரிப்பாக இருக்கிறது. சஞ்சய் தத், சல்மான்கான், ஜெயலலிதா, சங்கரராமன் கொலை வழக்கு, சிதம்பரம் கோவில்,பேரறிவாளன்,எலலாருக்குமே ஜஸ்டிஸ் ஈக்வாலிட்டிப்படிதான் இந்த நாட்டில் நீதி கிடைக்கிறதா என்று பார்த்தால் இன்னும் எவ்வளவு குடி அரசு நாட்கள் நாம் கொண்டாடிய பின் இந்த வார்த்தைக்கு உரிய மரியாதை பொருள் கிடைக்கும் என எண்ணிப்பார்த்தால் நாம் இருப்போமா இருக்க மாட்டோமா என எண்ணம் தோன்றுவதை தடுக்கவே முடியவில்லை.

நாட்டில் தமிழகம் போன்ற மாநிலங்களில் விடிஞ்சா என்றுமே குடி அரசுதான். அதிலும் இந்த ஆண்டு தேர்தல் ஆண்டு. எனவே விடியுமா இந்த மாநிலத்துக்கு நல்லரசு என்பதற்கு மே மாதம் 3 ஆம் வாரம் வரை காத்திருக்கவே வேண்டும்.

 

பிரான்ஸ் தேசத்தின் ரபேல் போர்விமான வியாபார ஒப்பந்தத்துடன் நமது நாட்டின் பிரதம விருந்தாளியாக பிரான்ஸ் நாட்டின் குடியரசுத் தலைவர் கலந்து கொள்ளும் முன்பே ஐஎஸ் ஐ எஸ் எச்சரிக்கை விடுத்தும் அதை இரு நாட்டு அரசுகளுமே அசட்டை செய்து விட்டன. இந்நிலையில் ஒரு வெள்ளை நிற அல்டோ காரைக் காணவில்லையாம் பட்டன் கோட்டில் தொலைந்த காரும் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லையாம். மேலும் ஒரு மிலிட்டரி மருத்துவரின் காரும் காணாமல் போய் அது தீவிரவாதிகளின் கையில் சிக்கி அது நாளை ஒரு அபாய செய்தியாக மாறிவிடக்கூடாது என த்ரில்லிங்கான குடியரசு தினமாக இந்த விடிஞ்சாக் குடியரசு.

இந்நிலையில் எமது முகநூல் அன்பர்கள் கலாமுக்கு பதிவிட்டு தமது மக்கள் குடியரசுத் தலைவருக்கு மரியாதையை செலுத்தி வருகின்றனர்.டாக்டர் ராஜேந்திர பிரசாத், டாக்டர் இராதாகிருஷ்ணன், டாக்டர் அ.பெ.ஜெ அப்துல் கலாம் போன்ற சிலர்தான் குடியரசுத் தலைவருக்கு உரிய பணியை சீரிய முறையில் கடமையாக ஆற்றியிருக்க அவர் போன்ற தலைவர்களுக்கும் இந்திய குடியரசில் வெறும் பேருக்கு மட்டுமே பதவிப் பெருமை மட்டுமே மற்ற சக்தி எல்லாம் பிரதமரிடம் குவிந்து கிடக்க, ஒளிந்து கிடக்க என்றுமே மாறா இந்நிலையில் இன்னும் ஒரு

விடிஞ்சா குடி அரசு நாள்…

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

உயிருடன் இருக்கும்போது எழுதுவதை எல்லாம் யாருமே கண்டுக்க மாட்டாமல் இறந்த பின் தான் கடிதத்துக்கு மதிப்பு என்று 3 கள்ளக்குறிச்சி யோகா கல்லூரியின் கிணற்றின் பெண்களும், ஹைதராபாத் மாணவர் ரோகித் வெமுலாவும், இறந்த விஷ்ணுபிரியா போன்றோரும் நிரூபித்து இருக்கும் வரை விடிஞ்சா குடி அரசுதான் இது விடிஞ்சா குடியரசு இல்லை…

எண்ணங்களை எடுத்துச் செல்ல:
வண்ணங்களாய் கொடுத்துச் சொல்ல
தெய்வா பப்ளிஷர் அட் ஜி மெயில் டாட் காம்.

deivapublisher@gmail.com

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s