Just another WordPress.com site

பச்சிலையில் கறுப்பு சிவப்பு புழுக்கள்: கவிஞர் தணிகையின் 1170 ஆம் பதிவு மறுபடியும் பூக்கும்.

பச்சிலையில் கறுப்பு சிவப்பு புழுக்கள்: கவிஞர் தணிகையின் 1170 ஆம் பதிவு மறுபடியும் பூக்கும்.

 

 

பச்சிலையில் இலை தோன்றும்போதே உண்டாகும் கறுப்பு சிவப்பு புழுக்கள் பற்றிய உண்மை அனுபவ சம்பவம்.அரசியல் கட்சி, ஆட்சி, நிர்வாகம் பற்றி எல்லாம் சொல்லவே இல்லை. இதற்கும் இந்திய நாட்டிற்கும், தமிழக ஸ்டேட்டிற்கும் பொருத்தி பார்த்து அப்படியே பொருந்துகிறது என்பார்க்கு நான் பொறுப்பல்ல.

 

 

கம்பளிப்புழு என்றாலே அதன் கொடுமை உணர்ந்தவர் பேர் சொன்னாலே இப்போதும் ஊர்வது மேனி எங்கும் ஊர்வது போல இருக்கும். குறைந்தது 3 நாளுக்காவது இதன் தடம் பதித்த இடம் எங்கும், ஊறிச் சென்ற இடம் யாவும்,தடித்த இடம் எல்லாம் உடல் யாவும் பரவி எரிச்சல், நமைச்சல், பிய்ப்பு,என பெரு வேதனை செய்யும். சும்மா அதன் சுனை போன்ற முடி பட்டு ஒற்றி விட்டால் கூட போதும் ஜென்மம் முழுதும் மறக்காது. இந்த கம்பளிப் பூச்சிகளில் புழுக்களில் பல வகை உண்டு. வேலிக் கருவேலா மரங்களில் உள்ளது கருமையாக பெரிய அளவில் பெருத்த ஆபத்துடையது. முருங்கை மர இலைகளை உண்டு காலி செய்வது நாம் பார்க்கும் வழக்கமான கம்பளிப் பூச்சிகள்.

ஆனால் இது பச்சிலையில் இலை தோன்றும்போதே உண்டாகும் கறுப்பு சிவப்பு புழுக்கள் பற்றிய உண்மை அனுபவ சம்பவம்.அரசியல் கட்சி, ஆட்சி, நிர்வாகம் பற்றி எல்லாம் சொல்லவே இல்லை. இதற்கும் இந்திய நாட்டிற்கும், தமிழக ஸ்டேட்டிற்கும் பொருத்தி பார்த்து அப்படியே பொருந்துகிறது என்பார்க்கு நான் பொறுப்பல்ல.

 

very smooth and soft to touch

இந்தப் பச்சிலைக்கொடி அல்லது பெருமருந்துக் கொடி வேரை யாரும் அழிக்கவே முடியாது சாதாரணமாக, இலை எல்லாம் இந்த கறுப்பு சிவப்புப் புழுக்கள் தின்றாலும் கொடி அப்படியே எளிதில் காயாமல் இருக்கும் அது மறுபடியும் இலைகளை துளிர்க்கும். அப்படித் இலைகள் துளிர்க்கும்போது அதனடியிலேயே இந்த புழுக்களும் சிறு புள்ளி போல தம் வாழ்வை ஆரம்பித்து இந்த இலைகளை எல்லாம் முசுக்கொட்டை இலைகளை பட்டுப்பூச்சி தின்று காலி செய்வது போல தின்று கொழுத்து நாளடைவில் கூட்டுப் புழுப் பருவம் அடைந்து கறுப்பு சிவப்பு வண்ணத்துப் பூச்சிகளாக பறக்கும். கட்சிக் கொடிகள் போல பட்டொளி வீசி அல்ல சிறகடித்துத்தான்.

இந்தப் பச்சிலை அதாவது பெருமருந்துக் கொடி இலைகளில்லாமல் வெறும் கொடியாக இருப்பதைப் பார்த்தால் நமக்குள் வெறுமை பூக்கும்.ஏன் இந்தப் புழுக்கள் இப்படி செய்கின்றன என கோபம் வரும் .ஆனாலும் அவற்றை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. சாதாரண மேம்போக்கானப் பார்வைக்கு இந்த புழுக்கள் இருப்பதே தெரியாது. சிறியதாக இருக்கும் வரை இலை அடியில் இருக்கும் நன்கு தின்று கொழுத்துப் பெரியதாக ஆனால் மட்டுமே நமது கண்களுக்குத் தெளிவாக புலப்படும்.

 

நான் என்ன சொல்ல வருகிறேன் என நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர். செடியை, இலைகளை காக்க வேண்டும் எனில் இந்தப் புழுக்களை அழித்தே ஆக வேண்டும். உழவன் உயிருக்கு எல்லாம் கவலைப்பட்டால் உணவே இல்லை. என்னும்போது எப்படி பச்சிலை கிடைக்கும்? பெரு மருந்தாக எப்படி பயன்படுத்துவது? எனவே முடிந்தவரை இந்த புழுக்களை அழித்தே ஆக வேண்டும். இரமாலிங்க வள்ளல், கடைஎழு வள்ளல்கள் எனத் தமிழர் புத்தர், யாவருமே ஜீவகாருண்யம் பேசட்டும். ஜீவ காருண்யம் பேசுவாரால் மனிதர்க்கு நல்ல மேன்மைதான் ஆனால் செடிகளையும் கொடிகளையும் காக்கவே முடியாது. பீர்க்கு (பீர்க்கங் காய்) உரமின்றி காய்க்க வைக்கும் இயல்பான முயற்சியில் விதைகள் இட்டு இரண்டு கொடி மரமேறி காய்க்கவும் செய்தது. உள்ளே புழு வந்து காய் கெட்டு விடுகிறது . இங்கு விதையிலேயே கோளாறு. பொறுக்குத்தரமான வீரியமான விதை இல்லை என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் நம் அனுபவத்தில்.

என்னைப் படித்து வருவார்க்கு எல்லாம் தெரியும் இந்த பெருமருந்துக் கொடி, இந்த பச்சிலை ஒரு சருமம் அல்லது தோல் நோய்களுக்கான அரிய நிவாரணி. எல்லாத் தோல் சம்பந்தப்பட்ட தேமல், காயம், ஏன் வெண்படை , வெண்குஷ்டம, தொழு நோய் போன்ற எல்லாவற்றையுமே இந்த இலைமூலம் சிகிச்சை செய்ய குணமாகிறது. ஆனால் இலை இந்தக் கொடி மிகவும் நீராண்மை உள்ள இடங்களில் மட்டுமே குளு குளு என்று இருக்கும் இடங்களில் மட்டுமே பல்கிப் பெருகும். நான் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் இடங்களில் சில நாட்களில் இந்த மூலிகைப் பச்சிலையை சேகரிக்கும்போது அவ்வளவாக இந்த கறுப்பு சிவப்பு புழுக்களைப் பார்க்கவில்லை. ஆனால் அதை நானே பயிரிட்டு எமது புழக்கடைத் தோட்டத்தில் உயிராக்கி உருவாக்கும்போது இந்த கறுப்பு சிவப்பு புழுக்கள் எல்லாவற்றையும் அரித்துத் தின்று விடுகின்றன. ஒரு வேளை மண் வளம் காரணமாக இருக்குமோ? ஆராயப்பட வேண்டியதே.

தி.மு.க சூரியன், அ.இ.அதி.மு.க, இரட்டை இலை, தேமுதிக முரசு, மதிமுக பம்பரம்,அடுத்து சொல்லிக் கொள்ள முடியா கட்சிகள் யாவற்றுக்குமே சின்னம் வேறாக இருந்தாலும் கொடியில் கறுப்பு சிவப்பும் இல்லாமல் இல்லை. ஏன் காங்கிரஸ் கொடியில் கூட காவி, தேசியக் கொடியிலும் காவி ஆனால் இரண்டிலும் பச்சை உண்டு. ஏன் பாரதிய ஜனதா கட்சியில் கூட காவி பாதி இருந்தாலும் பாதி பச்சை தானே …அட என்ன பச்சிலை பற்றி சொல்லி வந்தவன் இப்படி கட்சி நிறம் பற்றி சொல்ல ஆரம்பித்து விட்டானே என எண்ண வேண்டாம் எண்ணம் ஒரு பச்சையின் தொடராய் அங்கு சென்று விட்டது பச்சிலையும் கறுப்பு சிவப்புப் புழுக்களும் என்ற சிந்தனை எங்கு எங்கோ செல்கிறது கொஞ்சம் கட்டுப் படுத்திக் கொள்கிறேன்.

 

கறுப்பு சிவப்புப் புழுக்கள், பச்சைக் காவிப் புற்கள் வெற்றிலைக் காவியேறிய பற்கள், இடைத்தரகு என்பது இப்போது ஒரு இலாபமிக்கத் தொழில்.

கடவுளுக்கும் மனிதர்க்கும் இடையில் கோவில் பூசாரி, வாங்குவோர்க்கும் உற்பத்தி செய்வார்க்கும் இடையில் விற்பார் கை தேர்ந்த கைகார விற்பனையாளர்கள், விற்பன்னர் என்பது வேறு. ஆட்சிக்கும் மக்களுக்கும் இடையே கட்சிக்காரர்கள்.கட்சி இல்லாமல் ஆட்சி இல்லை.ஆட்சி இல்லாமல் மக்கள் இல்லை மக்கள் இல்லாமல் ஆட்சி இல்லை நிர்வாகம் இல்லை. மிரட்டுவோரும் மிரட்டப்படுவாரும் என்றே இந்த சமுதாய அமைப்பு.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s