Just another WordPress.com site

மயிர்சாமி: கவிஞர் தணிகையின் 1171 ஆம் பதிவு மறுபடியும் பூக்கும்

மயிர்சாமி: கவிஞர் தணிகையின் 1171 ஆம் பதிவு மறுபடியும் பூக்கும்

இதனால் சொல்ல வரும் நீதி யாதெனில்: சலவைக் கடைக்காரர்களிடம், சலூன்காரர்களிடம்,,பால் வியாபாரிகள், அல்லது இது போன்ற வீட்டுக்கு வாடிக்கையாக வரும் நபர்களிடம் சேவைத் தொழில் புரிவோரிடம் எல்லாம் நமது குடும்ப விஷியஙகளைப் பேச வேண்டாம், பேசக் கூடாது என்பதே.

 

 

இதற்கும் மேல் நேரம் இல்லாதார் படிக்கவும் அவசியமில்லை. நேரம் இருப்பார் மட்டுமே படிக்கவும்.

ஒரு முடியைக் கூட மனிதரால் கறுக்க வைக்கவோ வெளுக்க வைக்கவோ முடியாது-பைபிள்,
அல்லா கொடுக்க நினைப்பதை எவராலும் தடுக்க முடியாது – குரான்,
கடமையைச் செய் பலனை எதிர்பாராதே – கீதை

இவற்றின் அடிப்படையில் இந்த பதிவு

முடி இருந்தாலும் அழகு, முடி எடுத்தாலும், குழந்தைக்கு அழகு.(யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது போல்…ஆனால் இருந்தால் பெரிய அக்கப் போர் அதை வைத்து பராமரிப்பது என்ன லேசா? எனவே ஒரே போடு தந்தம் நல்ல விலைக்கு) அனேகமாக முடியை அதிகம் வாங்கிக் கொள்ளும் சாமி நம்ம ஏழுமலையானாக இருக்கலாம். ஆமாம் இந்த சாமி எல்லாம் முடி கேட்கிறதா என்ன? கை கால் வெட்டப்பட்டால் மிருகங்களுக்கு மனிதருக்கு வளராது. ஆனால் தாவரங்களுக்கு வளரும் எனவேதான் தாவர உணவு மேல் என்றனர் தமிழ் ஆன்றோர்கள்.ஆனால் முடி வளருமே. எனவே கடவுளுக்கு காணிக்கை. எல்லாமொரு நம்பிக்கைதான்.

இராம லிங்க வள்ளல் சிறு தெய்வ வழிபாடு கூடாது என்றார், நீட்டலும் மழித்தலும் வேண்டாம் என்றார் வள்ளுவர், கடவுளுக்கு எதுக்கடா காணிக்கை என்பார் டாக்டர் மு.வ போன்றோர் அதிலும் மயிரைக் கொடுப்பது ஆணவத்தை அழிப்பது எனவே அது வேண்டும் என்பார் சமணர், பார்ப்பனர்,ஏன் சிலர் சண்டையில் மயிரை ஆய்ந்து விடுவேன் என ஆய்ந்து அவர்கள் எதிரியாய் நினைத்தவர் முடியை சிரைத்த அறுத்த சம்பவங்களும் உண்டு.

கேசம்,குழல், அது ஒரு அழகிய அடையாளம் ஆண்களுக்கும் பெண்களுக்கும். எனவே புத்தம்,சமணம், துறவிகள் பிட்சுகள் எல்லாம் மொட்டை. பார்ப்பனர்கள் கணவனை இழந்த பெண்களை கைம்பெண் கோலத்துக்கு ஆளாக்கும்போது மொட்டை அடித்து விடுவார்கள் . அப்போதுதான் அவர்கள் காமம் , அழகு எல்லாம் குறையுமாம்.அப்படா, போதுமா இந்த பீடிகை. முன்னுரை நான் எழுதும் விஷியம் சற்று அல்ல அப்பட்டமான உண்மையானது அதனால் எனக்கு எந்த பின் விளைவும் எனக்கு என்றால் என் குடும்பத்துக்கு ஏற்பட்டு விடக்கூடாதே என்றுதான் இத்தனை முன்னுரையும்.

ஏன் எனில் எதையுமே கருத்து சுதந்திரத்துடன் தற்காலத்தில் எழுத முடியவில்லை. எங்கிருந்தாவது ஏதாவது முளைத்து விடுகிறது. இந்த மயிர்சாமி கதையும் அப்படித்தான். மயில்சாமி என்னும் தமிழ் சினிமா நகைச்சுவை, குணச்சித்திர நடிகர் சென்னை வெள்ளத்தின் போது நல்ல மிகுந்த சிரமம் எடுத்துக் கொண்டு தன்னலம் கருதாது சேவை செய்தார். அவரின் பெயர் கெட்டு விடக் கூடாது என்பதற்காகவே அவரின் பெயரோ மற்றவர் பெயரோ இதில் பயன்படுத்தப்பட வில்லை. நிகழ்வு உண்மை.ஆனால் எவரையும் குறித்து எழுதப்பட்டதல்ல. ஆனால் அனைவரும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதற்காகவே சொல்லப்படுகிறது.
இதனால் சொல்ல வரும் நீதி யாதெனில்: சலவைக் கடைக்காரர்களிடம், சலூன்காரர்களிடம்,,பால் வியாபாரிகள், அல்லது இது போன்ற வீட்டுக்கு வாடிக்கையாக வரும் நபர்களிடம் எல்லாம் நமது குடும்ப விஷியஙகளைப் பேச வேண்டாம், பேசக் கூடாது என்பதே.

இதற்கும் மேல் நேரம் இல்லாதார் படிக்கவும் அவசியமில்லை. நேரம் இருப்பார் மட்டுமே படிக்கவும்.

 

 

நான் 85ல் ஹைதராபாத் கிராமியப் பயிற்சியில் இருக்கும்போது தெலுங்கு பேசும் நிறைய தோழர்களிடம் பழக்கம், தெலுங்கு அப்போதுதான் சீக்கிரம் கற்றுக் கொள்ள முடியும். என இரவு உறங்கும் முன் பேசிக் கொண்டிருப்போம். அப்போது அதிகம் பேசாத ஒரு நபரை இவரைப் பற்றி சொல்லுங்களேன் என்றதும், அவரின் அப்பா ஒரு கண்ணியமிக்க அரசுப் பதவி,அப்போதே கார் வசதி எல்லாம் உண்டு.. ஆனால் அம்மா அவர்கள் தெருவில் சலவை செய்து கொண்டிருந்த ஒரு சலைவைத் தொழிலாளியுடன் ஓடிவிட்டார் என்பது அதிர்ச்சியூட்டுவதாய் நம்ப முடியாததாய், ஆச்சரியமூட்டுவதாய் இருந்தது. எனவே இன்னும் மறக்க முடியவில்லை.ஓடிய அம்மா அவனோடு பாடாய்ப் படுவதாக எல்லாம் நிறைய சொன்னார்கள்.அப்போது அந்த இளைஞரின் வயது சுமார் 23 இருக்கும்.

மேலும் கல்ராயன் மலையில் நாம் திட்ட அலுவலராய் இருந்த போது அருமையான ஒரு தம்பி எமது இரவு நேரப் பள்ளி ஆசிரியருள் ஒருவராய் இருந்தார் அவருக்கே மணமாகி குழந்தை எல்லாம் இருந்தது. அவனின் தாயார் இன்னொரு நபருடன் ஓடி விட்டிருந்தார். எமக்கும் எமது அலுவலக உதவியாளர்களுக்கும் ஒன்றுமே அதைப்பற்றிச் சொல்லத் தோன்றவில்லை. அவரை எப்படி தேற்றுவதென்றும் தெரியவில்லை.

மேலும் சமையல் எரிவாயு உருளை விநியோகம் செய்யும் ஒரு விடலையுடன் சேர்ந்து சொந்த கணவனை கொன்ற பிறகு அந்த தந்தை இழந்த குழந்தைகள் தாத்தா விட்டில் இருந்து தந்தை எப்படி இறந்தார் என்ற கதையை காவல்துறையினரிடம் சொன்ன செய்திகள் எல்லாம் நாமறிவோம்.

நிறைய ஆங்கிலத்தில் சலவைக்கார ஜோக் என்றெல்லாம் உண்டு. அதெல்லாம் வெறும் ஜோக் என்று நினைத்தது உண்டு. ஆனால் இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. ஏன் எனில் வாழ்க்கை வெறும் நகைச்சுவை அல்லவே…

 

ஒரு பெண் பீடி குடித்த வாயுடன் கையுடன் எனது குழந்தையை இந்த சலவை செய்யும் நபர் தொடுவது எனக்குப் பிடிக்கவில்லை என்ற பெண் கொஞ்ச நாளில் அந்த நபருடன் சகஜமாக பழக பேச்சுவார்த்தை கொள்ள என்ன இருக்கிறது அந்த நபரிடம் ..தெரியவில்லை. அந்த நபரும் இந்த குடும்பம் பற்றி சரியான கஞ்சன், இவன் யாருக்கும் ஒரு பைசாவும் செலவு செய்யமாட்டான் என அவர்களது குழந்தை ஒன்று படு சீரியசாக மருத்துவமனையில் கிடந்தபோது இவன் அவர்களைப் பற்றி பேசிய பேச்சு அடித்த கமென்ட். அப்புறம் எப்படி இவர்கள் இப்படி ராசியானார்கள்?.அதுதான் இந்த பதிவின் ஒரு கரு. நேற்று அல்லது அதன் முன் நாள் ஹன்ஸா, செல்லி சீனிவாசன் முகநூலில் இருந்து புல்லா நோய் பற்றி புகைப்பது பற்றி சற்று ஏற்கெனவே தெரிந்த தகவல் என்றாலும் கொஞ்சம் கூடுதலுடன் நன்றாக விவரிக்கப் பட்டிருந்தது அதனால் கவரப்பட்டு, மறுபடியும் நாமும் புகைப்பதை எதிர்க்க வேண்டியும் இந்தப் பதிவு.

ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டிய கதையும், பேருந்தில், தொடர் வண்டியில் சற்றே இடம்வேண்டி கேட்டு அமர்வார் கடைசியில் இடம் தந்த உங்களையே விரட்டுவாரே அது போன்ற கதையாகவும் இதை நினைக்கலாம். அல்லது நண்டு கொளுத்தால் வங்கில் இருக்காதாம் என்ற பழமொழியும் இதற்கு பொருந்தும்.

சற்றேறக் குறைய 20 அல்லது 25 ஆண்டுகளுக்கும் முன் ஒரு கிராமியத் தோட்டக் காட்டுப்பகுதியிலிருந்து வாழ்வு தேடி ஒரு மயிர்சாமி பக்கத்து ஊருக்கு வந்தால் தஞ்சம் அடைந்து பிழைத்துக் கொள்ளலாம் என பிழைப்பு நடத்த வந்தது. அதற்கு பெரியதான படிப்பறிவு எல்லாம் இல்லை. எனவே குலத் தொழில்தான் செய்ய வேண்டும் என்ற கால நிர்பந்தம். ஏதோ எப்படியோ தப்பிய வழி தவறிய வெள்ளாட்டுக் கதை போல ஒரு வாழ்வின் துணையை எல்லாம் தேடிக்கொண்டது இதெல்லாம் தவறில்லை.

ஒரு முக்கிய்ப் பிரமுகரிடம் சென்று இந்த வீதியில் இந்த இடத்தில் எனது சலவை செய்யும் பெட்டியை வைத்துப் பிழைத்துக் கொள்கிறேன் என்றது. அவரும் உரிய இடத்தை தேர்வு செய்து கொடுத்து இங்கு வைத்துக் கொள் எந்தப் போக்குவரத்துக்கும் இடைஞ்சல் இருக்காது என வாழ வழி காட்டினார்.

காலம் கை கொடுத்தது.. எனவே பிழைப்பு நன்றாகவே இருந்தது. தினமும் காலை வந்து இரவு வீடு திரும்பல். முதல் பகுதி. இரண்டாம் பகுதியில் அங்கேயே ஒரு வாடகை வீடு எடுத்து சலவை செய்த துணி எல்லாம் வைத்துச் சென்றது. மூன்றாம் பகுதி,அது ஒரு முக்கிய முச்சந்தியாக இருந்ததால் வழி தெரியாமல் வருவோர் போவோர்க்கு எல்லாம் வழி சொல்ல ஆரம்பித்தது, 4 வது பகுதி பீடியுடன் புகைத்தபடியே பெண்கள் ஆண்கள் மது,புகை எல்லாம் கலக்க ஒவ்வொரு குடும்பத்தின் விவரம் எல்லாம் அறியும் பகுதி. 5 வதுபகுதி எங்கே எங்கே வீடு காலி ஆகிறது எனத் தகவல் சேகரித்து உரியாருக்கு தமக்குப் பிடித்தமான வழியில் சொல்லி வார்த்தையை வைத்து விளையாடும் பகுதி, இந்த தகுதிகள் எல்லாம் வந்து சேர இவருக்கு உள்ளூரிலேயே ஒரு ரேஷன் கார்டையும் உள்ளூர் வார்டு பிரதிநிதி போட்டுத்தர ஊரின் ஒரு உறுப்பினர் அதன் பின் முக்கியஸ்தர், பிரமுகர் போல எல்லாரின் பிரச்சனைகளிலுமே தேவையில்லாமலே அழைப்பில்லாமலே கலந்து கொள்ள ஆரம்பித்த பகுதி, அடுத்து கிராமத்தில் இருந்து நிலத்தை விற்று பணி செய்த இடத்திலேயே ஒரு நிலமனையை வாங்கி வீடு கட்டிக் கொண்ட தகுதி.

இதெல்லாமே இரு பகுதி, அந்த நபரின் சுய முன்னேற்றம் பற்றி எவருமே குறை சொல்ல அவசியமில்லை. ஆனால் நாளடைவில் ஒரு நாட்டாமையாக எல்லாருடைய குடும்பவிஷியங்களில் எல்லாம் கலந்து கொள்ள ஆரம்பிப்பதும், ஓரம் சாரமாக வாயில் பேசி பிறரின் விஷியங்களை இவரின் சொந்த விருப்பு வெறுப்பு சார்ந்து கெடுக்கவும் மாற்றவும் முயல்வதுமான அடுத்த பகுதி நோக்கியும் வளர்ந்து விட்டார்.

ஒரு குடும்பம் மிக்க சிரமத்துக்கு இடையே ஒரு வீடு விலை பேச முன் பணம்(பெரும் தொகையாக) கொடுத்த பின்னாலும் அதை விட வசதியான நபர்களை வீடு விற்பாருக்கு அறிமுகப்படுத்தி ஏற்கெனவே முன் பணம் கொடுத்தவரை கெடுக்க நினைப்பது, நன்றாக இருக்கும் குடிகளை மாற்றி வேறிடம் அமர்த்துவது, வீதியில் எந்த நியாயம் ஆனாலும் அது தம்மை கலந்து கொள்ளாமல் இருக்கக் கூடாது என்றும், தாம் நினைப்பது போல இருக்க வேண்டும் என நினைப்பது , பேசுவது , முயற்சிப்பது…வீட்டாருக்கும், குடி அமர்வாருக்கும் நடுவாக இருந்து பஞ்சாயத்து பேச நினைப்பது…பேசுவது,

வழி கேட்டு யாராவது வந்தால் வேறு யாரும் சொல்லி விட்டால், அய்யோ , அண்ணா, அப்படி எல்லாம் சொல்லக் கூடதண்ணா, இப்ப காலம் கெட்டுக் கிடக்கு, எது எதுக்கோ எல்லாம் விலாசம் விசாரிக்கிறார்கள், காவல் துறை என்னைக் கூட கூப்பிட்டு மிரட்டுகிறது , பசங்க எல்லாம் மிரட்டறாங்க, என தாம் சொல்வது மட்டும்தான் சரி என நினைப்பது,,,

 

எப்போதும் பீடியை வாயில் வைத்துக் கொண்டு ஒரு பெண் பிள்ளைகள் கூட்டம் தம்மை சுற்றியும் இருக்க வேண்டும் என அனைவரையும் இழுத்து இழுத்து பேசிக் கொண்டிருப்பது இப்படியாக ஒரு அற்பம் அற்புதமாக எண்ணி தம் வாழ்வை நகர்த்தி வருகிறது. இதெல்லாம் புரியாமல் அந்த பீடியின் சாக்கடை நாற்றத்தில் நாட்டமுடைய விட்டில் பூச்சிகளும் சென்று விழுகின்றன இருக்கும்போது ஒரு வாறு பேசிக்கொண்டு அதே நபர் இல்லாதபோது வேறு வகையாக பேசிக் கொண்டு இருக்கும் தீயிடம், அதில் இரையானவர்களும் உண்டு. நேரம் பார்த்து இவன் எப்ப எதில் சிக்குவான் என நேரம் எதிர்பார்த்து காத்திருப்பாரும் உண்டு.இவ்வளவுதான் இந்த சிறுமைத்தனமுடைய கயமை குணம் கொண்டோன் பற்றி.

இதனால் சொல்ல வரும் நீதி யாதெனில்: சலவைக் கடைக்காரர்களிடம், சலூன்காரர்களிடம்,,பால் வியாபாரிகள், அல்லது இது போன்ற வீட்டுக்கு வாடிக்கையாக வரும் நபர்களிடம் எல்லாம் நமது குடும்ப விஷியஙகளைப் பேச வேண்டாம், பேசக் கூடாது என்பதே.

இது போல குணாம்சம் உடைய மனிதர்கள் அவ்வப்போது நமது தளத்தில் அறிமுகப்படுத்தப் படுவார்கள் நமது பதிவுகள் மூலம். நல்லவர்களும் உயர்வானவர்களும் கூட இடம் பெறுவார்கள். அவர்களையும் பாராட்டலாம் இவர்களிடமும் எச்சரிக்கையாக இருக்கலாம் இடம் வேறு மனிதர் வேறு என்பதெல்லாம் மாயை , தோற்றம். எல்லா இடங்களிலும் எல்லாமும் உண்டு.

அது குறித்த உங்களது எண்ணத்தை எமது மெயில் வழி அல்லது இந்த தளத்தில் பதிக்கலாம்.

deivapublihser@gmail.com

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s