Just another WordPress.com site

கிண்ணமணி: கவிஞர் தணிகையின் 1172 -ஆம் பதிவு மறுபடியும் பூக்கும்

கிண்ணமணி: கவிஞர் தணிகையின் 1172 -ஆம் பதிவு மறுபடியும் பூக்கும்

நேற்று ஒரு கேரக்டர், இன்று ஒரு கேரக்டர் ஆனால் இரண்டும் வேறு வேறு.பேர் மட்டும் வேறு.அல்லது ஒன்று. என்ன குழப்பம் வேறு ஒன்று, ஒன்று வேறு. சொல்வதெல்லாம் உண்மை. சிகப்பு ரோஜாக்கள் போல எல்லாம் சொல்ல முடியாது. ஆனால் இவரிடமும் மாடி வீடு கார் எல்லாம் உண்டு.வாடகைக்கு கூட வீடு குடித்தனம் விடுமளவு வசதி எல்லாமுண்டு .ஆனால் இனி படித்து நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

இவர் ஒரு மிகப்பெரும் அரசு நிறுவனத்தில் உதவிப் பொறியாளர்.குழந்தையாக இருந்தபோதே தந்தை இல்லை. தாயின் அரவணைப்பில் மட்டுமே வளர்க்கப்பட்டவர்,அல்லது வளர்ந்தவர்..கணினி சார்ந்த ஒரு நிறுவனத்திலும் பணி புரிந்து விட்டு பகுதி நேரப் பொறியியல் பட்டப் படிப்பு முடித்து தற்போதைய உதவிப் பொறியாளர் நிலையை எட்டியவர். இது ஒரு முகம்.வயது 44.

இவரின் முதல் மனைவி இரண்டு ஆண் வாரிசுகளை ஈன்று தந்து விட்டு, இவர் முகத்தில் விழித்தால் தற்கொலை செய்து கொள்வேன் எனச் சொல்லி இவரின் கண்காணாத இடத்தில் இருக்க வேண்டும் என தமது பெற்றோர் குடும்பம் சார்ந்த அரவணைப்புக்கே சென்று சேர்ந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன.ஆண் வாரிசுகள் கூட பெரிய பையன்களாக வளர்ந்து பள்ளியில் படிக்கிறார்கள்.அவர்களும் இப்போது அம்மாவோடுதான் இருக்கிறார்கள்.ஆனால் அந்த குடும்ப வாரிசுகளுக்கு ஏதோ பணம் போட்டு வங்கியில் வைத்து வருவதாக சொன்னதுமுண்டு.

அடுத்து இவர் கட்டிய இரண்டாம் மனைவியும் இவருடன் 8 மாதங்கள் மட்டுமே உறாவு இருந்து விட்டு முடியாது என்று சென்று தாய் வீட்டில் இருந்து கொண்டு வம்பு வழக்காகி விட்டது இவர் வாழ்க்கை.ஆக குடும்ப வாழ்க்கை சுகமில்லை சோகம்.இந்நிலையில் இவருக்கு உலகையே முன்னெடுத்துச் செல்ல ஆசை.இவர் முதலில் நின்று நிறைய செய்ய வேண்டும் என்ற அவா எல்லாம் உண்டு.

திடீர் என பெருங்குரல் எடுத்துப் பேசுவார் அனைவரும் இவரை யார் எனத் திரும்பிப் பார்க்க வேண்டும் என்றெண்ணி, திடீரென ஆங்கிலத்தில் பேசுவார். நீங்கள் ஆச்சரியப்படக்கூடாது.

திடீர் என காலில் விழுவார், நீங்கள் என்னை சீடராக ஏற்றுக் கொள்ளுங்கள் என யாமறிந்தே பலரிடமும் கேட்டுக் கொள்கிறார்.

 

ஆலோசனைக்கு வருகிறேன் என்பார், ஆனால் இவர் வந்து நமக்கு ஆலோசனை வழங்குவதாக அனைவரும் நினைக்கும் வண்ணம் பேசிடுவார். ரெண்டில் ஒன்று பதில் சொல்லியே ஆக வேண்டும் சே எஸ் ஆர் நோ என கட்டாயப்படுத்துவார். பார்ப்பவர்க்கு நாம் அவரிடம் ஏதோ கடன் வாங்கி விட்டது மாதிரியும் இவர் நம்மை கட்டாயப்படுத்திப் பேசுவது போலவும் வெளிப்பார்வைக்கு தெரியும்.

இவரின் குடும்பப் பிரச்சனைகளை இவர் தரப்பு மட்டுமே சொல்வார், இவரின் துணைகளின் தரப்பை விளக்கவே மாட்டார். அதற்கு வாய்ப்பு தரவே மாட்டார். இவர் நம்மிடம் வந்து இணைந்தது அப்துல் கலாம் மக்கள் தேசிய இயக்கம் நடத்த ஆரம்பித்து அவரது பிறந்த நாளுக்கு ஒரு பள்ளி விழா ஏற்பாடு செய்தபோதுதான். ஆனால் இவர் எங்கு எல்லாம் விழா நடக்கிறதோ அங்கெல்லாம் சென்று பேச வாய்ப்பு கேட்பார் , பேசுவார்.கோவில்களில் கொடுக்கும் பிரசாதத்தை வைத்தே காலம் தள்ளி விடமுடியுமா குடும்பஸ்தரால்? இவர் எப்படி வேண்டுமானால் கோவில் பொங்கல் சாப்பிட்டே வாழ ஆசைப்படலாம். ஆனால் வீட்டில் திருமணமான பெண்களும் அப்படியே வாழ்வதென்றால் முடியுமா? அவர்கள் வேலைக்குப் போனாலும் மாத ஊதியத்தை தம்மிடம் தான் தர வேண்டும் எனக் கட்டாயப்படுத்தினால் எந்த பெண்ணுக்குத்தான் எரிச்சல் வராது?

இவரின் நச்சரிப்பு தாங்க முடியாமல் இவரின் சகவாசம் வேண்டாம் என்று மறுத்தபோது இவரால் நிறைய தொல்லை ஆரம்பம். வீட்டுக்கு வந்திருந்த வேறொரு நண்பரை 5 விநாடியில் நீங்கள் சென்று விடுங்கள், எனக்கு நேரம் இவருடன் ஒதுக்கப்பட்டிருக்கிறது, இவருடன் நான் தனியே 20 நிமிடம் பேச வேண்டும் என ஒரு வழக்கறிஞர் மூத்த வயதுடைய நண்பரை விரட்ட ஆரம்பித்தது எனக்கே ஒரு மாதிரியாக இருந்தது.

இவரின் உறவினர், நட்பு யாவுமே இவருடன் பழகுவது அபாயம் என எச்சரிக்க, இவர் ஒரு நாள் எமது வீட்டில் முன் உள்ள கணபதி கற்சிலைக்கு நீர்,பூஜை பொருட்கள் எல்லாம் எடுத்து வைத்திருக்க மகனும், நானும் குளித்து விட்டு விளக்கேற்றலாம் என்பதற்குள் இவரே வந்து விளக்கேற்றி விட்டு சென்று விட்டார்.

மறுநாள் வந்தவர் யாருமறியாமல் ஒரு வெற்றிலை ஒரு பாக்கு வைத்து விட்டு சென்று விட்டார்

மறு நாள் வந்தவர் அதே விநாயகர் சிலை அருகே கடித்து விட்டு ஒரு துண்டு இஞ்சியை வைத்து விட்டு யாருமறியாமல் செல்ல முயல, மகன் மணியம் அதைக் கண்டு அவரை அழைப்பதற்குள் தனது இருசக்கர வாகனத்தில் பஞ்சாய்ப் பறந்து விட்டார்.

இதெல்லாம் ஏன் செய்கிறார், எதற்கு செய்தார் என்று புரியவில்லை. தெரியவில்லை. ஒரு காரணம் எம்மோடு அவரை இனி பழகக் கூடாது என்ற சொல்லிய சொல்லின் வெப்பம் தாங்கமாட்டாமல் இதைச் செய்கிறார் என்று நாங்கள் நினைத்து விட்டோம்.

இந்த மனிதர் சரியாக சாப்பிடுவதில்லை, சரியான தூக்கம் இன்றி மனநிலை பிறழ்ந்தவராக காணப்படுகிறார். இவரின் தோற்றம் ஆரம்பத்தில் நமக்கு இவரை இவரின் செயல்பாடுகளை தெரிவிக்கவில்லை. நாளடைவில் இவரை நாம் பார்த்த அனுபவம், இவரின் செயல்பாடுகள் எல்லாம் இவரை வேறுபடுத்தி காட்டி வருகின்றன.

எனவே எந்த மனிதரையுமே அவரின் தோற்றத்தை வைத்து எடைபோட்டு பழக ஆரம்பிக்காதீர்.

தோற்றத்தைக் கண்டு தொலைந்து போகாமலிருந்தால் வரும் மாற்றம் கண்டு மலைக்கத் தேவையிருக்காது. இது இவரும் நமக்குச் சொல்லும் நீதி. இது பற்றிக் கேட்ட எல்லா நண்பர்களுமே நீங்கள் எச்சரிக்கையுடன் இருங்கள் சார், இது போன்றவர்கள் உயிர் ஆபத்தைக் கூட விளைத்து விடுவார்கள் என்கிறார்கள். துணைவியாரும் யாருமில்லாதபோது வந்து ஏதாவது செய்து விடுவாரோ என அஞ்சுவதாகவும் நிலை மாறி விட்டது.

நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில் வாழும் மனிதர் கோடி….

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s