Just another WordPress.com site

கனவுப் பிரியனின் கூழாங்கற்கள் :கவிஞர் தணிகையின் 1173 ஆம் பதிவு மறுபடியும் பூக்கும்.

கனவுப் பிரியனின் கூழாங்கற்கள் நூல் :கவிஞர் தணிகையின் 1173 ஆம் பதிவு மறுபடியும் பூக்கும்.

திரு.இரத்தினவேல் அய்யா, வில்லிப் புத்தூரிலிருந்து கூழாங்கற்களை பதிவஞ்சல் மூலம் அனுப்பி இருந்தார். அவர் தினமும் அனுப்பும் 20 பேர் பட்டியலில் முதல் நாளிலேயே முதல் முதலாய் என் பேரை இடம் பெற வைத்து எனக்கு அனுப்ப இருப்பதாக குறிப்பிட்டதே பெருமை.

 

இந்த கூழாங்கற்கள் உண்மையிலேயே பவளக் கற்களாகி விட்டன கனவுப் பிரியனுக்கு அவர் தமது கூழாங்கற்கள் சிறுகதையில் சொல்லி இருப்பது போல.வாழ்க்கை ஒவ்வொரு கணமும் நழுவிக் கொண்டிருக்கும் நிலையில் சிலருக்கு ரணம் சிலருக்கு மணம். அதில் மணம் பரப்பும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் கனவுப்பிரியன், இரத்தினவேல் அய்யா ஆகியோர்க்கும் எனது முதல் கண் நன்றி..இனி நூல் பற்றி.

நூல் நல்ல தயாரிப்பு. அனுபவங்கள் சம்பவங்கள் சிறுகதையாக உருமாறி இருக்கின்றன பெரும்பாலும்..சில பிழைகள் இருந்தபோதும் அச்சாக்கம் நன்றாக அழகிய வடிவத்தில் நல்ல தரமானத் தாளில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. ஓவியா பதிப்பகம் வத்தலக் குண்டு.

256 பக்கங்களில் 30 பக்கங்களுக்கும் மேல் கி.இராஜநாராயணன் முதல் பலரிடமும் அணிந்துரை வாங்கப் பட்டுள்ளது நூலாசிரியரின் உரையுடன். ஒவ்வொரு வாழ்விலும் ஒரு கதை பதியப்பட வேண்டியதாயிருக்கும். அதை பதிப்பது உலகிற்கு நல்லது. இந்த கூழாங்கற்களில் 21 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன.

முகநூல் நண்பர்களாக இவர்கள் இருப்பதால் ஏற்கெனவே ஐந்து அல்லது ஆறு கதைகளை ஏற்கெனவே படித்திருக்கிறேன். என்ற போதிலும் இப்போது ஒரே தொகுப்பில் புத்தகமாக கொடுத்திருப்பதில் எனக்கு மிக மகிழ்வு. ஒரே நாளில் படித்து தீர்த்து விட்டு தாகத்துடன் இருப்பவர் நன்றாக குடித்துத் தீர்ப்பது போல அதன் பிறகுதான் கணினி முன் அமர்ந்திருக்கிறேன் மற்ற பணிகளுக்கும் முன் அனுபவித்ததைப் பற்றி சொல்லி விடலாம் என்று.

1. இந்த மடம் இல்லைன்னா சந்த மடம் சொல்வது சமூகப் பணியாளர்களுக்கும் பல சாதனையாளர்களுக்கும் வாழ்வு இப்படித்தான் நகர்ந்து நகர்ந்து போய்விடுகிறது சிறுகதையாய் முடிந்து போகிறது.

2. கூழாங்கற்கள்- துன்பமும் இன்ப அதிர்ச்சியுமாய்.இன்ப துன்பம் இரண்டுமே வாழ்வின் இருபக்கமுடைய நாணயம் என்பதாய், வாழ்வின் சில புள்ளிகள் கோலமாய் நிறைவடையவே என பெண்குழந்தையின் திக்குவாய் நோயும், மனைவிக்கு பிடிக்காமல் இருந்து தள்ளிப் போனபின் மனம் மாறி பிடிப்பு ஏற்படுவதுமாய்…ஏ.சி மெக்கானிக், பொறியியல் பட்டதாரி போட்டி யுத்தமாய்…

3. களிமண் வீடு- பழம் நினைவுகள் அல்லது பால்ய நினைவுகளில் களி மண் போல பிசு பிசுவென ஒட்டிக்கொள்ள,

4. குண்டு பாகிஸ்தானி- நான் அடிக்கடி குறிப்பிடுவது போல..தோற்றத்தைக் கண்டு தொலைந்து போகக் கூடாது என்ற தத்துவ நெறியில். வியட்நாம் ,ஜெர்மனி, இணைந்தது போல ஒரு நாள் இந்தியாவும் பாகிஸ்தானும் இணையக்கூடாதா?

5. வடிவு- மனிதரை விட மிருகங்கள் மேல் என்று கண்ட தெளிவு.விற்று விட்ட ஆடுகளுக்காக கண்ணீர் சிந்துவதும், வடிவு இறந்து விட்டாள் என அந்த ஆடுகள் உண்ணாமல் அழுதபடியே கத்துவதாகவும்.

6. மேட் இன் சைனா- காபி, இமிடேசன், மாதிரி, போல பார்த்து செய்வதிலும் அறிவை புகுத்தி

7. நெற்றித் தழும்பு: எட்டு வயது சிறுவனின் ஈர நினைவு.இந்துமதி தரையில் இறங்கும் விமானங்களில் சொல்வது போல வானமும் கடலும் பயணிக்கத்தான் லாயக்கு, மற்றபடி தரைதான் எப்பொழுதும் சுகம். ..இவருக்கு ஆனது போலவே மகன் மணியத்துக்கு சுமார் 4 வயதில் பள்ளியில் இரும்பு மேஜை விளிம்பில் பட்டு இடது புருவத்துக்கும் மேல் ஒரு வெட்டுக்காயம் அடையாளத் தழும்பு நாலு தையலுடன் என்றும் மறையாமல். எனவே இது எனக்குள்ளும் ஒட்டிக் கொண்டது.

landscapes seascape sunset sunrise ocean sea sky clouds stone rock shore coast wallpaper background

 

 

8. காட்சிப்பிழை- அரசியலின் உள் முகம், நல்லவர்களின் வெளிமுகம்

9. உப்புக் காற்று – உறைக்க உறைக்க

10. கடல் தாண்டிய உறவு- இயற்கை போடும் வாழ்க்கை முடிச்சு தலைமுறை தாண்டிய நேசமாய்.

11. பெட்ரோமாஸ் லைட்டேதான் வேணுமா? நம்ப முடியவில்லை. ஆனாலும்….சுஜாதாவின் நகாசு தெரிய..

12. நாடு துறந்தவன் கதை அவ்வளவாக பிடிபடவில்லை

13. இனி ஒரு விதி செய்வோம்: நதியைத் தான் இணைக்கவில்லை. இதையாவது செய்வோமே என மூலிகை வைத்தியத்தை அறிவியல் கலத்தில் ஏற்றி…ஒரு செய்தியாய் பரப்ப பரவ..கனவு.

14. மனிதரில் இத்தனை நிறங்களா? பழி ஓரிடம் பேர் வேறிடம். உள்ளூர் வெறியும் வெளி நாட்டிலும் நெறியும்.

15. பனங்கொட்டைச் சாமியார்: ஜெயகாந்தனை நினைவு படுத்த, கூழாங்கற்களும் இதுவும் எதுவும் முடிவல்ல ஆரம்பம் என்கிறது நல்ல தூண்டு உணர்வைத் தரும் .

16. ஓ.இரசிக்கும் சீமானே: எல்லாம் ஒரு இதுக்காக இருக்கலாம், அல்லது இடைத்தரகு வரவுக்காக இருக்கலாம் எனவே புரிந்து கொள்ளாதிருப்பது நல்லது.

17. அவரு அனில்கும்ளே மாதிரி: நல்ல நகைச்சுவை. ஏற்கெனவே படித்திருந்தபோதும் திரும்பவும் படித்துச் சிரிக்க இரசிக்க முடிகிறது .நடக்கும் விளையாட்டுக் களமும், அந்நிய தேசமும் கற்பனையில் நம்முன் விரிகிறது .இந்தக் கதை கனவுப் பிரியன் அவர்களின் வெற்றி

18. கே.இரபீக் அட் ஜி மெயில் டாட் காம்: வாழ்வின் சில நேரம் பெரிய அசம்பாவிதங்களைத் தவிர்க்க சில விபத்துகள் தேவையாய் இருக்கின்றன.உண்மைதான்.

19.ஜைனப் அல் பாக்கர்: கன்குலூசன் முடியவில்லை எனில் கன்பியூசன் செய். நல்ல நடைமுறை வழக்கம். நிறைய மனிதரால் பின் பற்றப்படுவதே. இது கதையல்ல. பிரச்சாரம். ஆதங்கம். வாழ்வின் முறை.

20. ஜுவானா என்றொரு பிலிப்பைனி பெண் வேலையிலிருது ரிசைன் பண்ணி இருக்க வேண்டாமே எனத் தோன்றுகிறது.

21. அக்கா அழகா இருக்கீங்க: எச் பி சி டி, ,மைசூர் சேன்டல் ட்ரீட்மென்ட் டோர்ன் தெரபி என அட்வான்ஸ்டு முறைகளில் குற்றம் தடுக்கப்படலாம் என்கிற பெண்.

உண்மையைச் சொல்லும் முகத்தை கனவுப் பிரியனின் கதை கலந்த சம்பவங்களில் அடிக்கடி காணமுடிகிறது. இது அவரது எழுத்தின் நடை தரும் பலமும் பலவீனமும். சில பல இடங்களில் கதையின் வீச்சு குறைந்திருக்கிறது எனச் சொல்லத் தோன்றுகிறது. ஆனால் இது ஒரு புது முயற்சி. அனுபவப் பகிர்தல். அனைவருக்கும் பங்கிட்ட விருந்து.

எனக்கு கதை எழுதத் தெரியாது. அதற்கு மிக்க நிதானம், பொறுமை, உழைப்பு வேண்டும். ஆனாலும் வாழ்நாளில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேல் பல்வேறுபட்ட மொழிகளிலும் தமிழிலும் எண்ணிக்கையில்லாக் கதைகளுடன் பயணித்தவன் என்ற உரிமையில் சொல்கிறேன்.

கனவுப் பிரியனைப் படிக்கலாம்
விலைக்கு வாங்கிப் படித்தால் அவர் இன்னும் புத்தக முயற்சி செய்வார்.

இவர் இன்னும் முயற்சி செய்தால் மெச்சத் தக்க சிறுகதைகளையும் தரலாம் என்பது எனது எண்ணம்.

ஆக்கிய அனைவருக்கும் கனவுப் பிரியனுக்கும், முக்கியமாக திரு. என். இரத்தினவேல் அய்யா அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி.

மறுபடியும் பூக்கும் வரை.
கவிஞர் தணிகை.

 

இந்த விலாசத்தில் இருந்து நூலைப் பெறலாம்
என்.இரத்தினவேல்
7-எ, கூனங்குளம்
தேவங்கர் வடக்குத் தெரு
திருவில்லிப்புத்தூர்- 626 125
விருது நகர் மாவட்டம்
தமிழ்நாடு
செல்பேசி: 9443427128.

e.mail: rathnavel.natarajan@gmail.com

usooff@gmail.com

Advertisements

3 responses

 1. கனவுப் பிரியனின் கூழாங்கற்கள் :கவிஞர் தணிகையின் 1173 ஆம் பதிவு மறுபடியும் பூக்கும். = அருமையான மதிப்புரை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். மிக்க நன்றி. திரு
  thanigai maniam

  January 30, 2016 at 2:16 am

  • thanks for your sharing of this post sir. vanakkam.please keep contact

   January 30, 2016 at 10:26 am

 2. உங்கள் பதிவு படித்தேன் எனக்கு ஆர்வம் வந்து விட்டது. நீங்கள் சொல்லி தான் கனவுப் ப்ரியன் அவர்களின் எழுத்தை படிக்க ஆரம்பித்தேன் .
  நன்றி .

  எதிர் பார்த்து கொண்டிருக்கிறேன்
  கூழாங்கற்களுக்குகாக…

  கனவுப் ப்ரியன்அவர்களுக்குகு வாழ்த்துகளை சொல்லிக் கொள்கிறேன் .

  February 6, 2016 at 2:46 pm

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s